Skip to main content

Posts

Showing posts from 2008

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள். கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல் இழந்த இளவல் எனவகைப் பட்டார் அழுந்தும் கடிவாளம் காண். கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல் உறுவல் அழுந்த ஒருவன் இளவல் மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத் தறுக உணர்ந்தாள் தனித்து. தறுக - தவறாக ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள் 'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல் கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத் தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'. அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல் இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள் தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில் வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து. விளர்தல் - வெளுத்தல், வெட்குதல் சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர் 'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம் உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச் சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட கட்டறுந்த கண்கள் கசிந்து. வேற

அலைபேசி உலவிகளும் தமிழும்

நண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை. இணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா? உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும். இதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்? சிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா? ஆ

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன் புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த கோமகன் மக்கள் குறையற ஆண்டனன் தாமரைப் பூமக ளோடு. கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில் பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய் நன்னிலஞ் செல்ல நசிந்து. குசை - மகிழ்ச்சி கோவில் - அரண்மனை கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள் எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான் வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று. அத்தம் - காடு என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள் சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார் மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு. சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும் நிறையிலை என்பார் இருக்க - பொறையறு மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால் குன்றில் உருண்டதாம் கல். இரியல் - விரைந்து, நிலை தடுமாறி தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம் மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப் பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே பணிந்தான் இளவல் பழிக்கு. பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில் அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான், சுணங்கினான் சோர்வா

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ! இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது. தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த வி

திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?

அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்! ( திங்கள் சத்யா ) மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள். திங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா? 1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்? 2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது? 3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி? 4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்? இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.

எறும்புடன் ஒரு பயணம் - புனைவு

இன்று காலையில் தான் அந்த விநோதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் தாமதமாக அலுவலகத்துக்கு புறப்பட்டேன். உலகமே அழிந்தாலும் தன் கடமை தவறக்கூடாது எனக் கருதும் என் மனைவி எனக்குக் கட்டுச்சாப்பாட்டை தந்து விட்டு பெப்போவை (என் பையங்க) பால்வாடிக்கு அழைத்துச் சென்றார். நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் 24ம் எண் பேருந்தைப் பிடித்தேன். அதுவும் வழக்கம் போல் ஊர்ந்தே நகர்ந்தது. நான் இருக்கும் லொராங் சுவானிலிருந்து பாயா லேபா தொடர் வண்டி நிலையம் செல்ல அரை மணி நேரம் ஆகும். அங்கிருந்து 8 நிமிட தொடர் வண்டிப் பயணம் தானா மேரா நிலையத்திற்கு. அந்த சந்திப்பில் பொதுவாக 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வரும் சாங்கி செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தால் அலுவலகம் அடையலாம். இதுக்குள்ள ஒரு மணி நேரமாகி விடும். இன்னும் பேருந்தில் தான் இருந்தேன். நிமிடக் கணக்கு, நொடிக்கணக்கு எல்லாம் பார்த்தும் 10 மணிக்கு முன் அலுவலகம் அடைய முடியாது என்ற உண்மை வெறுப்பேத்தியது. ஒலி பண்பலையில் ஆனந்தம் ப்ரூவுடன் ஓடிகொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடங்களில் இந்திப் பாட்டு போட்டு விடுவார்கள். நினைக்கும் போதே இன்னமும் வெறுப்பாக இருந்ததது.

இரகு வெண்பா - காவியம் பாடல்

இராமன் கதை இங்கே நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல் நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று) ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும் பாயிரமாய்ச் செய்தார் பரிந்து. இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல் இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார் வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும் வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத் தேனனையும் பாக்களைத் தான். புகழுறப் பாடி அவைதனை அடைதல் பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர் தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும் ஒக்கவே சென்றார் உவந்து. இசைத்த இளையோர் இருவரும் மன்றில் அசைத்த அகமொரு வாரி - விசையுறு வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே யாசகம் பாடும் சிறார். வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர். மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப் பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில் இடைவெளி வேண்டியேப் பெற்று. சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும் அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில் ச

இரகு வெண்பா - வால்மீகி

இராமன் கதை இங்கே காட்டில் கொள்ளையராய் வாழ்ந்த வலியனை நாரதர் சந்தித்தல் கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்; கள்ளம் நிறைந்த வலியனை வெல்லும் தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான் 'கருமப் பழியார் உடைத்து?' வலியன் மறுமொழி துச்சமென்பார் எம்குலத்தோர் என்பழியை ஏற்றிடவே அச்சமில்லை எப்பொழுதும் மேதினியில் - மிச்சமின்றி கூவிடுவேன் யாவரையும்; என்பழிக்காய் போட்டியிட மேவிடுவோர் எண்ணிக்கை மேல். பழி ஏற்க யாருமின்றி வால்மிகியாக துறவறம் தழுவுதல் அல்லன ஆற்றுவான் ஈட்டு(ம்)பழி ஒப்புவர் இல்லை உவனிடம், உள்பட பொல்லாமை நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன் இங்ஙனம்இல் வாழ்வு துறந்து. உள்பட - உண்மை உள்ளத்தில் பட இனியவர் தேடி இரகுவினை அறிதல் முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார் 'இனியவர் யாருளர் இங்கே?' - இனிவரும் காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே காடையின் கதறும் ஒலி! வேடனை வெருண்டு முதல் பாடல் விளம்புதல் கண்ணுற நேர்ந்ததே கண்ணீரில் காடையை புண்ணுற வீழ்ந்ததே உந்தியும் - தன்னிலை விண்ணுற தீஞ்சொல் மொழிந்தாரே வேடற்கு மண்ணுற வாழும் முதல். உந்தி - துணை, பறவை முதல் - தொடக்கம் பறவை உயிரைப் பறித்த தருணம் துறவி பலுக்கும்

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி

தசாவதாரம் - பார்க்கலாம்!

'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது. அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று, இலந்தைப் பழம் போல் என்னுள்! உரித்துத் தின்ன இயலாது; முற்றும் முழுங்கவும் முடியாது; மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது! அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.

திராவிட 'கிரிக்கெட்' குஞ்சு

கிரிக் இன்போ வலைதளத்தில் சொன்னார்கள் (Quote Unquote) பகுதியில் 'நாங்கள் கடவுளை நம்புவதில்லை. எங்கள் குடும்பம் பகுத்தறிவாளர்களால் ஆனது' என்ற வரிகளைப் பார்த்தவுடன் அட நம்மாளு மாதிரி தெரியுதேன்னு நினைச்சேன். சொன்னவரு பேரு நெப்பொலியன் ஐன்ஸ்டீன். முடிவே பண்ணிட்டேன், தமிழர் தான்னு. ஒண்ணு, இது மாதிரி கடவுள் மறுப்பை பொதுவில் தெரிவிக்க ஒரு தமிழரால் தான் முடிகிறது. இரண்டு, இது மாதிரி, பெயர்கள்ல எது முதல் பேரு எது கடைசிப் பேருன்னு தெரியலைன்னா அவர் தமிழர் தான். இவர் பேரு ஐன்ஸ்டீன், அப்பா பேரு நெப்போலியன். (இதுவே ஒரு பெரிய தொடர் இடுகைக்கான தலைப்புகள் தான்.) அவரோட ஆட்ட குறிப்புகளைப் பார்த்தேன். இரண்டு அ வரிசை ஒருநாள் ஆட்டங்களில் ஆடி இருக்கிறார். அறிமுக ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக 92 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றியில் சிறப்பான பங்காற்றி இருக்கிறார். பந்து வீச்சில் கலக்கா விட்டாலும் ஓட்டங்களை வாரித் தராத வகையில் வீசி இருக்கிறார். இப்போது மலேசியாவில் நடந்து வரும் 19 வயதானோருக்கான உலகக் கோப்பையில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் களத்தில் ஆடும் வாய்ப்பைப் பெறவில்லை. பர்க்கலாம், எவ்வளவு தூரம் இந

தமிழ்மணம் மறுப்பு!

எனக்குத் தோன்றியதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வலைபதிவினைத் தொடங்கினேன். சரி, கருத்துக்களை பட்டை தீட்டி, ஊக்கம் பெற மற்றவர்களின் பின்னூட்டம் பெரிதும் உதவுமேன்னு நினைச்சு தமிழ் மணத்தில் இணைக்க விண்ணப்பித்தேன். தானியங்கி முறை என் பதிவின் தமிழ் எழுத்துக்களின் அளவை ஐயப்பட்டது. மின்னஞ்சலோ, மறுப்புக் கடிதம் மட்டுமே பெற்றது. காரணத்தை விளக்கக் கோரி எழுதிய மடல் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. எனவே இந்தப் பதிவில் ஒரு பதிவருக்கு சரிவர பதில் தராத தமிழ்மணத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவிட்டு யாராவது இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வழி சொல்லிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, ஒரு நல்ல எழுத்தாளர் உருவாவது தமிழ்மணத்தால் தாமதமானது என (என்னைப் போலவே) நினைத்தால் உங்கள் கண்டனங்களையும் பதிந்து செல்லுங்கள்.

பில்லா பாத்திட்டீங்களா?

அண்மையில் மலேஷியாவில் கோலாலம்பூர், லங்காவி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். சுற்றுலா குறித்து பின்பு எழுதுகிறேன். சிங்கப்பூர் திரும்பியதும் பில்லா படம் பார்த்தோம். வாழ்வில் முதன் முறையாக 'இதோ இந்த இடம் நாம பாத்தோம், நாம போன இடம்' என குழந்தை போல் சத்தமாச் சொல்லிக்கிட்டு குதூகலித்தோம். முதல் முறையாக இராமேஸ்வரம், பாம்பன் முதலிய பகுதிகளைத் திரையில் கண்ட போது மகிழ்ந்ததைப் போல் இருந்தது. அப்போது கூட அரங்கிலேயே கூவியதில்லை. இப்பல்லாம் யாரிடம் பேசினாலும் முதல் கேள்வி 'பில்லா பாத்திட்டீங்களா' தான். சின்னபுப்புள்ளத் தனமாத்தான் இருக்கு.. ஆனாலும் தவிர்க்க முடியலை ;-)