Skip to main content

Posts

Showing posts from July, 2009

பணம் பத்தாகுது!

ஒவ்வொரு நாடும் பணம் அச்சடிக்க பெருவாரியாக செலவு செய்கின்றன. போலியாக உருவாக்க முடியாதவாறு பல்வேறு நுட்பங்களைப் புகுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவது வரை என கிட்டத் தட்ட அச்சடிக்கப் படும் பணத்தின் மதிப்பில் கணிசமான அளவு செலவாகி விடும். பின் எப்படி அரசால் நிர்வகிக்க முடிகிறது? உண்மையில் அரசு தான் வெளியிடும் ஒவ்வொரு பணத்திலிருந்தும் பல மடங்கு வருமானத்தை மீட்டு எடுக்கிறது. எப்படின்னு பாப்போம். எடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வழங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார். இப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அ