
எடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வழங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார்.
இப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அரசிடம் சேருகிறது. அப்படின்னா நாம பணம் சம்பாதிக்கிறது வெறும் உள்ளுணர்வா, உண்மை இல்லயான்னு கேட்டா அதுக்கு விடை, நாம் நமது நாட்டுக்காக (நமக்காக) உழைக்கிறோம். உழைப்பின் வெகுமதியாக நம் செலவினங்களுக்காக கையெழுத்துப் போட்ட தாள்களைத் தருகிறது. அதை எண்ணிக்கையால் சிறிதுன்னும் பெரிதுன்னும் சொல்லிக் கொள்கிறோம். உணவு, உடை, உறையுள்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாட்டு மக்களின் உழைப்பின் அளவு தான் GDP என்று கணிக்கப் படுகிறது. வரவு செலவுத் திட்ட அறிக்கை ஒரு நாட்டு மக்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதைத் திறம்பட நிர்வகிக்கிறார்களா என்பது வேறு.
நாமிருவரும் இதுபோல் கையெழுத்துப் போட்டு தாள்களைப் பகிர்ந்து கொண்டு, அதனை மதித்து நடந்தால் அதுவும் பணமே, நம்மிருவரைப் பொறுத்த வரை! என்ன அரசின் பணம் போல் பத்து நூறாகாது:-)
====================================================================================
குமுகாயம், மொழி மற்றம் அறிவியல் என்று மூன்று பிரிவுகளில் போட்டி அறிவிக்கப் பட்டிருக்கிறது. உங்கள் திறன் வாய்ந்த கருத்துகள் கொண்ட தலைப்பு எதுவென்று தேர்ந்து படைப்புகளை அனுப்புங்கள். மறக்காது விதிமுறைகளையும் ஒருமுறை பாருங்கள்.
Comments
:)
//சம்பாதிக்கிறது//
ஈட்டுகிறது.
நல்ல யோசனை தான்