Skip to main content

Posts

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து
Recent posts

சுனைப்பூ சூடியவள் - மீள்நிகழ்வு

என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள். ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை. இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு. ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு. பிரிவுன்னா அப்படித் தான். ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு. மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன். தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்

சுனைப்பூ சூடியவள் - இன்று மலர்ந்தவை

தேனு, உன்னைய எனக்கு ரொம்பப் புடிக்கும் இன்னிக்கு தான் தோணுச்சாக்கும் எப்பவுமே புடிக்கும் தேனு எனக்கு அப்படித் தெரியலையே மெய்யாலுமே தேனு ம், சரி எவ்வளவு புடிக்கும், ஒரு காப்படி? அய்யோ, நான் உண்மையத்தான் சொல்றேன். என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவுலயும் உன்னைத் நிறைச்சிருக்கேன் தெரியுமா! கதை விடற. எப்படி நான் நம்புறது? வேணும்னா என் மூச்சுக் காத்தைக் கேளு. அப்ப மூச்சுல முடிஞ்சு வைச்சிருக்கன்னு சொல்லு. நான் முடிச்சு வைக்கல. உன் நினைப்ப உடம்போட ஒவ்வொரு நாளமும் காத்தா முடிச்சு வைச்சு அனுப்புது. அப்ப என் நினைவுகள் கொஞ்சநாள்ல தீந்து போயிருமே? அப்ப புதுசா காத்தை உள்ள இழுத்து உன் நினைவுகளை முடிஞ்சு உள்ள அனுப்புவேன். உன் பேச்சு தான் என்னய இப்படி கிறுக்கா உக்கார வைச்சிருக்கு. இருவரும் பேசவில்லை. ஒரே நேரத்தில் பெருமூச்சு எழுகிறது. ம், இப்படி பெருமூச்சு வந்ததே, அது என்னவாம். தீராத ஏக்கம் இருந்துச்சுன்னா ஏக்கம் இன்னும் பல எண்ணங்களை உருவாக்கும். அந்ம எண்ணங்களின் முடிச்சுகள் காத்துல நிரப்பி அனுப்ப நேரமாகும். அதனால மூச்சு பெரிசாயிரும். மகிழ்ந்து சிரிக்கிறாள். உன்னய மடக்க முடியாது. நீ எம்மேல நம்பிக்கை இல்ல

சுனைப்பூ சூடியவள் - பாணாள் பள்ளி யானை உயிர்த்து

வணக்கம் டாக்டர் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். இதே மாதிரி எங்க போனாலும் முகமூடி போட்டிக்கிட்டு போங்க. அடிக்கடி கைகளைக் கழுவுங்க. வீட்ல எல்லாரும் நலமா? நலம். கரோனானால மூச்சுத் திணறல் ஏன் டாக்டர் வருது? கரோனா கிருமி உள்ள நுழைஞ்சதும் அதைக் கொல்றதுக்காக தற்காப்புத் துறை தன் படைகளை அனுப்பும். அதுல கீட்டோன்சும் உண்டு. மற்ற படைகளால் வெல்ல முடியாதப்ப கீட்டோன்ஸ் கிருமியை சுத்தி வளைச்சு வெடிச்சிருங்க. தற்கொலைப் படை. இந்த வெடிப்புல நுரையீரல் செல்களும் பாதிக்கப் படும். இதே மாதிரி ஒவ்வொரு கிருமியாக் கொல்லும் போது நுரையீரல் பெருவாரியா பாதிக்கப் பட்டிருக்கும். இதனால நுரையீரலால மூச்சுச்சுற்றை முடிக்க முடியாம திணறல் வருது. இந்த மூச்சுச் சுற்றை விளக்குங்களேன்? பள்ளிக் கூடத்துல படிச்சது மறந்து போச்சா? (சிரிக்கிறார்) மூச்சும் இதயமும் ஒருங்கிணைந்து செயல்படணும். உடம்புல உள்ள செல்கள்ல ஆற்றல் எரிப்பு தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஆக்சிஜன் வேணும். குருதி தான் ஆக்சிஜனை சுமந்து செல்லும். ஆக்சிஜனை குருதில ஏத்தி விடுறது நுரையீரலின் முதல் சுற்று. இந்தக் குருதியை இதயம் உடல் முழுக்க நல்

சுனைப்பூ சூடியவள் - 1

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கண் பேதை தானறிந் தனளோ இலளோ பானாள் பள்ளி யானையின் உயிர்த்தென் உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே! -கபிலர் அவள் ஒரு பேதை. அன்பு நிரம்பியவள். அது அவள் கண்களிலேயே தெரியும். நான் பார்த்திருக்கிறேன். மலர்ந்து மணம் வீசும் மலரைச் சூடும் பெண்களிடையே பூக்களுக்குப் பறிக்கும் துன்பம் தர அஞ்சுபவள். உதிர்ந்து சுனை நீரில் ஓடி வரும் பூக்களைத் தொடுத்தே அணிபவள். இவ்வளவு ஏன், திணைக் காவல் சென்றால் மாலை திரும்பும் போது தொண்டை கட்டிக் கொண்டிருக்கும். ஏய் கிளி, என் காட்டின் கதிர்களை தின்னாதே. எனக்கு இழப்பு ஏற்படுத்தாதே. தின்றது போதாதா என்றெல்லாம் திட்டுவாளே ஒழிய கவண் வில் சுழற்ற மாட்டாள். கிளிகளுக்கு அடிபடுமோ என வாடுவாள். என் மனைவி தான் அவள். இப்போது பொருள் தேடி வெகு தொலைவு வந்து விட்டேன். நெஞ்சில் நின்றாடும் அவள் காதல் பார்வை சுரக்கும் அன்பு பெரும் ஏக்கத்தைத் தருகிறது. அந்த ஏக்கம் நள்ளிரவில் உறங்கும் யானையின் மூச்சினும் நெடியதாய் பேரொலி கிளப்பி என் நினைவுகள் அவளையே சுற்றி வருவதை அறிவாளா என்ற வினாவோடு முடிகிறது.

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும

தனி குறும்படம் - பார்வை

முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி. அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான். நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது. இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொ