Skip to main content

Posts

Showing posts from July, 2007

உங்கள் பார்வைக்கு

அந்தியில் மலர்ந்த அல்லி.... உறுமீன் வருகிறதா..

உலக அதிசயங்கள் - பகுதி 2 ஈஸ்டர் தீவுகள்

தென் பசிபிக் கடலில் இருக்கும் சற்றே விரிந்த கவட்டை (புரியாதவர்களுக்கு பூமராங்) வடிவிலான அந்தத் தீவில் சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். சிலி நாட்டுக்கு சொந்தமானது. இந்த சிறிய தீவில் என்ன சிறப்பு? கடற்கரை முழுவதும் ஓரளவு சீரான இடைவெளியில் கடலை பார்த்தவாறு மார்பளவில் அமைந்திருக்கும் சிலைகள் தான். சற்றே நெருங்கினால் “விலகு, நான் எதிர்பார்த்திருப்பது வேறொருவரை” என்பது போல் இன்னும் வெறித்த பார்வை. நிழற்படத்தில் பார்த்தாலே 'ஊ'வென காதில் இரையும் காற்று. பொட்டல் காட்டின் நடுவே இருக்கும் குலசாமியை தனியே பார்க்க வந்த உணர்வு. யார் செய்த சிலைகள்? எப்படி இங்கே வந்தன? இந்த தீவே எரிமலை சாம்பல் மேடுறுத்தி உருவானது என்கின்றனர் ஆய்வாளர்கள். இங்கு முதன் முதலில், சுமார் தற்காலம் (CE) 500 - 800 அல்லது 1000-1200 வாக்கில் ஹொட்டு மடுவா என்பவர் தன் கூட்டத்துடன் குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர் வழித்தோன்றல்கள் தங்களுக்காகவும், மூதாதையர் மற்றும் கடவுளர்களுக்காகவும் செய்த சிலைகள் இவை. மேலும் கப்பல்களில் வரும் எதிரிகளை அச்சுறுத்த இப்படி பிரமாண்ட சிலைகளை வைத்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இந

உலக அதிசயங்கள் - பகுதி 1

ஒரு வழியாக உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இந்த அதிசயங்களைப் பற்றி சில வரிகள், எனக்குத் தெரிந்த வரையில் 1. தாஜ் மஹால் பிடித்தது - எழில் கொஞ்சும் வடிவம். காதலின் சின்னம் ஆதலால், பார்க்கும் பொழுது (படத்தில் தான்) துணையை நினைத்துக் கொள்வேன். பிடிக்காதது - என்ன தான் அழகு என்றாலும், ஷாஜஹானின் தனிப்பட்ட விருப்பத்திற்காக கொடுங்கோல்(?) ஆணையை ஏற்று எழும்பிய, பல இழந்த உயிர்களின் நினைவகமும் அல்லவா? 2. சீனப் பெருஞ்சுவர் நாட்டை மங்கோலியப் படையெடுப்பில் இருந்து காப்பதற்காக பல காத தூரத்திற்கு கட்டப்பட்டது. ஓரளவே பயன் தந்தது என்றாலும், விண் வெளியிலிருந்து காணலாம் என்பது பொய் என்றாலும் பிரமாண்டம் கை கொடுத்திருக்கிறது. 3. ஏசுவின் சிலை பிரேசிலின் பிரமாண்டம் என்பதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை. 4. இட்ஸா பிரமிடு - மெக்ஸிகோ எகிப்து பிரமிடுகளைப் போன்று வட அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மனிதர்களால் கட்டப்பட்டது. பழைய உலக அதிசயங்கள் பட்டியலிடப்பட்ட போது மாயன்களைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. தாமதமான அங்கீகாரம். 5. மச்சு பிச்சு - பெரு மாயன்களின் ஒன்று விட்ட இன்கா நாகரிக மக்களின் மலை ந

யார் வள்ளல்?

கடையெழு வள்ளல்கள் பற்றி கேட்டபொழுது, அந்த சிறு வயதில் வியப்பே மேலிட்டு நின்றது. இல்லையென சொல்ல மாட்டார்களாமே; ஈயேன் என்பது இழிவு என வாழ்ந்தார்களாமே எனப் பல முறை வியந்து போனதுண்டு. அதியமான் நெல்லிக்கனி ஈந்த போது ஔவையை விட நான் அதிக உவகையுற்றேன். அத்தனையும் பாரியையும், பேகனையும் அறிந்தவுடன் பொசுக்குனு மறைஞ்சு போச்சு. (உபயம்; பாதி ஆசிரியர், மீதி என் பற்றா அறிவு). மேகம் கண்டு, மோகம் கொண்டு மயில் ஆடினால், பேகன் பட்டுப் போர்வை தந்தது அறிவு மட்டு. தன் நிலை கொள்ளா முல்லை; கண்டதும் பாரியின் தேர் அவனிடம் இல்லை. இப்படி சிந்திக்காமல் ஈதல் எப்படி வள்ளல் தன்மை ஆகும்? சே, சுத்த பைத்தியகாரத்தனம்னு நினைச்சேன். அண்மைக் காலமாக வரும் எட்டாவது வள்ளல், ஒன்பதாவது வள்ளல் அறிவிப்புகள் மீண்டும் பழைய ஞாபகங்களை தூண்டியது. இவர்கள் நிச்சயம் பணக்காரர்கள். ஆனால், மனசாட்சி இவர்களை வள்ளல்கள் என ஏற்க மறுத்தது. ஆயிரம் பேருக்கு என எண்ணி அன்னதானம் செய்பவர், ஆதாயம் எண்ணி செய்பவர் எப்படி வள்ளலாக முடியும்? ஆம்! எண்ணி, எண்ணி செய்பவன் பணக்காரன்; எண்ணிய உடன் செய்பவன் வள்ளல். பாரியும், பேகனும், அதியமானும் எண்ணிய உடன் வழங்கினார்கள

ஏன் கறுப்பு?

நினைவு தெரிந்த நாள் முதல், கல்லூரி காலம் உள்பட, கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்ததில்லை. கறுப்பு நிறத்தில் வாங்கி வந்த ஆடையை தந்தை கொளுத்தியதாக நண்பன் கதைத்த பொழுது பெருமிதப்பட்டிருக்கிறேன், நானும் கூட கறுப்பை வெறுப்பதாக. பிறகு எதற்கு என் பதிவு தளம் இத்தனை கறுப்பாய்? இது என் இனத்தின் நிறமா? இல்லை, இல்லாததின் உருவகமா? அழகு கறுப்பில், புரிந்ததா? அதீத வெறுப்பில் விளைந்ததா? எதுவுமே இல்லை; வலைதளத்தில் நிறைய கறுப்பு, மின்னாற்றல் அளவில் குறைப்பு! உள்ளத்தின் கதவைத் தட்டி, உண்மையைச் சொன்னது சுட்டி ! பயன்படுத்துவோம், கறுப்பு கூகுள் .