Skip to main content

ஏன் கறுப்பு?

நினைவு தெரிந்த நாள் முதல், கல்லூரி காலம் உள்பட, கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்ததில்லை. கறுப்பு நிறத்தில் வாங்கி வந்த ஆடையை தந்தை கொளுத்தியதாக நண்பன் கதைத்த பொழுது பெருமிதப்பட்டிருக்கிறேன், நானும் கூட கறுப்பை வெறுப்பதாக.

பிறகு எதற்கு என் பதிவு தளம் இத்தனை கறுப்பாய்?

இது என் இனத்தின் நிறமா?
இல்லை, இல்லாததின் உருவகமா?
அழகு கறுப்பில், புரிந்ததா?
அதீத வெறுப்பில் விளைந்ததா?
எதுவுமே இல்லை;
வலைதளத்தில் நிறைய கறுப்பு,
மின்னாற்றல் அளவில் குறைப்பு!
உள்ளத்தின் கதவைத் தட்டி,
உண்மையைச் சொன்னது சுட்டி!
பயன்படுத்துவோம், கறுப்பு கூகுள்.

Comments

creative360° said…
first even i was wondering why balck? kid of difficulty to read [usability :)]. Then when I realised that it is for a cause, i should say I was impressed.

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...

தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை

இரண்டு இளைஞர்களில் விவகானந்தரை எல்லாருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில் நாம் முதன்மைப் படுத்தப் போவது இன்னொரு இளைஞரான அளசிங்கப் பெருமாளை. அளசிங்கப் பெருமாள் தந்தை அன்றைய சென்னை மாகாணத்தின் சிக்கமகளூரில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர். இங்கேயே படித்து முடித்த அளசிங்கப்பெருமாள் கும்பகோணத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரானார். ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறி...