Skip to main content

Posts

Showing posts from June, 2009

விசயம்

தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று. இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது. மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது. புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க? மாற்று: என்ன வேலையா வந்தீங்க? புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க. மாற்று:

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர். அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்ற