Sunday, June 28, 2009

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர்.

அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சென்னையில் வலுவான பின்னனி கொண்ட திமுக, தமிழ் நாட்டிலேயே கல்வி அறிவு நிறைந்த தென் சென்னையைக் கோட்டை விட்டிருக்கிறது. வட சென்னையும் திருப்பெரும்புதூரும் தொழிலாளர் நிறைந்த தொகுதிகள். காஞ்சிபுரம் அதிமுக முன்னனியில் இருந்து பின்னுக்குப் போன தொகுதி. அங்கு சட்ட மன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியலாம்.

தென் சென்னை, மதுரை போன்ற தொகுதிகளில் பணத்தை விட தனிப்பட்ட உழைப்பும், ஆளுமையுமே வெற்றி பெற்றுத் தந்ததாக நினைக்கிறேன். தூத்துக்குடி, கன்னியாகுமரி படித்தவர்கள் நிறைந்த தொகுதிகள். ஆனால் தேர்தல் என்று வந்தால் சாதி, மத அடிப்பபடையில் மட்டுமே வாக்களிப்பதால் அவற்றை இங்கே பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

வெற்றி பெறா விட்டாலும் தென் சென்னையில் போட்டியிட்ட சரத்பாபு பரவலாக அறிமுகம் பெற்றது பதிவர்களால் தான். ஈழச்செய்திகள் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப் பட்டபோது அச்செய்திகளை பரவலாக அறியத் தந்ததும் இந்த மாற்று ஊடகமே.

பதிவர்களை விட படிப்பவர்கள் தான் கூடுதலாக இருக்கிறார்கள். பதிவுகளைச் சுட்டி எனக்கு வரும் அஞ்சல்களில் பெரும்பான்மை பதிவர் அல்லாதவர்களிடம் இருந்து தான் வருகிறது. அவர்கள் மூலமாக பதிவின் கருத்துகள் இட்டீடிற்கு (விவாதம்) உள்ளாகி மேலும் பரவி இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

பதிவர்கள் இன்னும் ஆக்கத்துடன் பரவலாக செயல்பட்டால் வருங்காலத்திலும் தேர்தலில் சிறப்பாக பங்காற்ற முடியும். மேலும் முயன்றால் தேர்தலில் வென்று சட்டமியற்றும் மையங்களுக்கு தேர்ந்தெடுக்கப் படலாம் என்றே கருதுகிறேன். மற்ற நாடுகளில் பதிவர்கள் என்ற அடையாளத்துடன் வேட்பாளர்கள் வென்றிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோருக்கு வாழ்த்துகள்.

=====================================================

பதிவிடுவதால் என்ன நன்மை என்று கருதி உங்கள் கருத்துக்களை வெளியிடாது இருப்பவரா? இந்தச் சுட்டியை ஒரு பார்வை பார்த்துடுங்களேன் ;-)

14 comments:

said...

காரிக்கிழமை நமது ஒன்றுகூடலில் உரையாடும் வரை இந்த கோணத்தில் நான் பார்கவில்லை. முற்றிலும் புதுக்கோணம்.


பொறுப்புள்ள‌ ப‌திவுக‌ள் க‌ட்டாய‌ம் அதிக‌ள‌வில் வ‌ர‌வேண்டும்.

said...

மிக அருமையான பதிவு நண்பா, பதிவுலகம், அரசியல், சினிமா, பொதுமக்கள் அனைவரையும் சென்று அடைகிறது என்பதில் சிறிது அளவுக்கூட ஐயம் இல்லை :-)

நல்ல பதிவு, இன்னும் ஆக்கமாக பதிவு போட்டால் நீங்க சொன்ன மாதிரி எனக்கும் என் பதிவும் சரி நண்பர்களின் பதிவும் சரி கதையாக சிறந்த பார்வர்ட்டாக வந்து இருக்கிறது..

நல்ல பதிவுகள் எப்படியும் காலத்தால் அழியாம சுத்தி கொண்டு தான் இருக்கும்

said...

நீங்கள் இன்னொன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள். தென் சென்னை தவிர மற்ற மாநகரங்களில் தோற்றது திமுக அல்ல .காங்கிரஸ் மட்டுமே ..நீங்கள் கணக்கில் எடுக்காத வேலூரில் வென்றதும் உதய சூரியன் தான் .

இதிலிருந்து ஏதாவது புரிகிறதா என பாருங்கள்.

said...

உங்கள் கோணம் எந்த அளவு சரியானது என்பது எனக்கு தெரியவில்லை. சில நூறுகளை வேணுமானால் பாதித்திருக்கலாம். ஆனால் லட்சங்களை பாதித்திருக்குமா என்று தெரியவில்லை...

said...

பதிவுகளை படித்தவர்களை நிச்சயம் பாதித்திருக்கலாம். ஆனால் ஓட்டு வங்கிகளை பாதிக்கும் அளவுக்கு இருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

இன்னமும் இணையம் பயன்படுத்துவோருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள விகிதாச்சாரம் மிக அதிகம்.

சமூக அக்கறையுள்ள பதிவுகள் நிறைய வர வேண்டும் என்பதை
வரவேற்கிறேன்.

said...

@ஜோசப்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@சுரேஷ்
நல்வரவு, நன்றி.

//நல்ல பதிவுகள் எப்படியும் காலத்தால் அழியாம சுத்தி கொண்டு தான் இருக்கும்//
உண்மை.

said...

@ஜோ
//இதிலிருந்து ஏதாவது புரிகிறதா என பாருங்கள்.//

அடங்க மாட்டீங்கன்னு தெரியும்ல:-)))))))))

@டொன்லீ, அறிவிலி

எனக்கென்னமோ பதிவுகளின் வீச்சை பொதுவாகவே நாம் குறைத்து மதிப்பிடுகிறோம்னே தோணுது. பதிவர் என்ற ஒரே அறிமுகத்துடன் ஒருவர் தேர்தலில் வெல்லும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

said...

ஏதோ நமக்கு சாதமான கண்ணோட்டத்தில் பார்பதுபோல இருக்கு. மதுரையில் பதிவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் இருப்பினும் மாற்றம் இல்லை. திருச்சியில் பதிவர்கள் பற்றிய விவாதம் இல்லை ஆனால் மாற்றம் கண்டுள்ளது. என்னைப்பொருத்தவரை நடந்துமுடிந்த தேர்தலில் மதசார்பின்மை என்ற எண்ணம் மக்களிடையே தூண்டுதலாக இருந்திருக்கின்றது.... புதிய கோணத்தில் பார்வை பாராட்டுகள் நண்பரே

said...

//பதிவர்கள் இன்னும் ஆக்கத்துடன் பரவலாக செயல்பட்டால் வருங்காலத்திலும் தேர்தலில் சிறப்பாக பங்காற்ற முடியும்.//

வழி மொழிகிறேன்

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஞானசேகரன்.

said...

நசரேயன், குங்குமத்தில் சிறுகதை வெளியானதுக்கு வாழ்த்துகள். அப்பப்ப வா மாப்ள.

said...

//பதிவர்கள் இன்னும் ஆக்கத்துடன் பரவலாக செயல்பட்டால் வருங்காலத்திலும் தேர்தலில் சிறப்பாக பங்காற்ற முடியும்//

இதை மட்டுமே ஒத்துக் கொள்ள முடியும்.

said...

அறிவிலி அண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்

said...

தீப்பெட்டி, நகரத் தொகுதிகளை திமுக கூட்டணி (திமுக ஏன் இந்த முறை நகரத் தொகுதிகளை விட்டுப் பின் வாங்கியது) இழந்ததற்கு, குறிப்பாக தென் சென்னையை இழந்ததற்கு எனக்கு வேறு எந்த காரணிகளும் குறிப்பாகப் பிடிபடவில்லை. ஒருவேளை படித்தவ்வர்கள் திமுகவை விட்டு விலகுகிறார்களோ?

கோவி, இடுகைகளின் கருத்து பதிவர்களோடு நின்று விடும் என்றால் விழுகாட்டு ஒப்பீடு பேசலாம். இடுகைகள் செய்திகளின் பல கோணங்களையும் (அதைப்) படித்தவர்களிடம் கொண்டு சேர்த்தன. வெளிப்படையான இட்டீடுகள் நடந்தன. விளைவு தேர்தலில் எதிரொலித்தது எனக் கருதுகிறேன்.