ஒன்றுமில்லை!
தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை
இரண்டு இளைஞர்களில் விவகானந்தரை எல்லாருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில் நாம் முதன்மைப் படுத்தப் போவது இன்னொரு இளைஞரான அளசிங்கப் பெருமாளை. அளசிங்கப் பெருமாள் தந்தை அன்றைய சென்னை மாகாணத்தின் சிக்கமகளூரில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர். இங்கேயே படித்து முடித்த அளசிங்கப்பெருமாள் கும்பகோணத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரானார். ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறி...
Comments
//வரும் ஞாயிற்றுக்கிழமை (15-06-08) அன்று சென்னை எல்டாம்ஸ் ரோடு பார்வதி மினி ஹாலில் தமிழ்மண நிர்வாகிகளோடு நேருக்கு நேர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.// நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க..
தொடர்ந்து எழுதுங்க.
show details 6:13 PM (25 minutes ago) Reply
அவர் இன்னும் பல வெண்பாக்களைப் படித்தால் அவரது எழுத்து இன்னும் சிறப்பாக அமையும்.
ஒவ்வொரு அடிக்குள்ளும் மோனை இருக்கவேண்டும். 1-3 சீர்களில் இருந்தால் சிறக்கும்.
------------------
கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
கள்ளம் நிறைந்தார் வலியனை வெல்லும்
தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
'கருமப் பழியார் உடைத்து?'
வெண்பாவில் பொதுவாக இரண்டு வகை. - இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா. 4 அடி வெண்பாக்கள் இவ்விரண்டுள் ஒன்றாகும்.
4 அடிகளும் ஒரே எதுகை அமைவது ஒன்று.
1,2 அடிகள், 2ம் அடியின் 4வது சீர் - இவை ஒரு எதுகை பெற்றும், 3,4 அடிகள் வேறு எதுகை பெற்றும் அமைவது இன்னொரு வகை.
'வெல்லும்' என்பதைக் 'கள்ளம்', 'கொள்லை' என்பவற்றோடு சேர்த்து இன எதுகை என்று கொள்ளலாம். (அதாவது எல்லாம், ல்,ள், போல இடையின எழுத்துகாளால் அமைந்துள்ளது). ஆனால் அது அவ்வளவு சிறப்பு அன்று.
------
அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்
இல்லை உவனிடம், உண்மையிது! - பொல்லாமை
நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
இங்கனம் இல்வாழ்வு துறந்து.
குற்றியலுகரப் புணர்ச்சியில் கவனம் தேவை.
கனிச்சீர் வரக்க்கூடாது.
வெண்டளை கட்டாயம் இருக்க வேண்டும்.
"இங்கனம் இல்வாழ்வு துறந்து" என்பதை
'இங்ஙனம்இல் வாழ்வு துறந்து' என்று பிரித்தால் வெண்டளை சரியாக இருக்கும்.
----------
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
திரு முகவை மைந்தன், என் நண்பருக்கு உங்கள் கவிதையை அனுப்பினேன். சிறந்த ஆசுகவி ஆன அவரின் பதில் இது. உங்களுக்கு ஏதானும் சந்தேகம் இருந்தால் அவரின் ஐடியைக் கொடுக்கலாமா எனக் கேட்டு வாங்கித் தருகின்றேன். இதை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பைப் பொறுத்தது. மிக்க நன்றி, உங்கள் பின்னூட்டத்துக்கும், வரவுக்கும், தொடர்ந்து பின்னூட்டங்களை முடிந்த போது அளிக்கவும். நன்றி.
//நம்ம லக்கி லுக் இல்லீன்னா பாலபாரதி பிளாக்குக்கு போய் உங்க பிரச்சினைய போட்டு வைங்க. அவங்க கேட்டு பதில் தருவாங்க.. //
இரண்டாவது விண்ணப்பம் தமிழ்மணத்தின் ஒப்புதலைப் பெற்று என் பதிவுகள் அங்கே தெரிகின்றன. உதவிக்கு நன்றி. பதிவுகளை தொடர்ந்து வாசியுங்கள்.
கீதாம்மா, வழிகாட்டுதலுக்கு நன்றி. சுட்டி தந்து என் பதிவில் வெண்பாக்களை வெளியிடுகிறேன். அவ்வப்போது சரி பாருங்கள்.
ஜெகதீசன், இங்கயும் புன்னகை தானா? வருகைக்கு நன்றி.
ஒன்றுமில்லை என்று உணர்பவரே
அறியார், தெறியார், வெறியார்.
உங்களை அல்ல:)