முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி. அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான். நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது. இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொ...