Skip to main content

"தனி" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)

கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார்.

திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும்.

பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் பார்த்தவர்கள் எப்படி வெவ்வேறு விதமாக அணுகினார்கள்னு புரியலை(அடுத்த பதிவுல என்னோட பார்வையச் சொல்றேன்).

இடையில் குறும்பட அடர்தட்டு விரும்புவோருக்காக 10 வெள்ளி நன்கொடை பெற்று வழங்கப்பட்டது. நூறு வட்டுகளாவது விற்றிருந்தால் தயாரிப்பாளர் கையை வலுப்படுத்தி இருக்கும். நானும் 5 வட்டுகள் பெற்றுக் கொண்டேன். வர முடியாதவர்களுக்காவும், ஊரில் கொண்டு போய் காட்டலாம்னு தான்.

பின்னர் நேரமின்மையால் மிகச்சுருக்கமான கலந்துரையாடல் செழியனுடன் நடந்தது. அதிலும் வழமையான கேள்விகள் தான். திரைப்படங்கள் ஆபாசமா இருக்கு, பாடல்கள் தரக்குறைவா இருக்கு.. இந்த மாதிரி. செழியன் 'படங்கள் வணிகம் சார்ந்தவை. நீங்க படங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்க. சில படங்களின் வெற்றியே நல்ல படங்களின் விழுக்காட்டைக் கூட்டும்'னு சொன்னார்.

பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.

அடுத்த கேள்வியா இதழ்கள்ல சிற்றிலக்கிய வகை இருக்கும் போது அப்படி வணிகம் சாராத படங்கள் வருவதைத் தடுத்தது எதுன்னு கேட்டார். செழியன், அப்படி ஒரு வெற்றிடம் இருப்பது உண்மை தானென்றும் இது போன்ற மாற்றுத் திரைப்படங்கள் குறித்த விழிப்புணர்வு அந்த நிலையை மாற்றும்னு தான் நம்புவதாக்க் குறிப்பிட்டார்.

வழக்கம் போல் நூலக நிர்வாகம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன். உடன் வந்த பதிவர்களும் இந்த சேர்க்கை நல்லா இருக்கிறதா சொன்னாங்க! கூட்டம் முடித்து கிளம்பினோம். எங்கன்னு அடுத்த இடுகைல பாப்போம்.

Comments

//பதிவர் குழலி குறும்படங்கள் என்றாலே அழுகையும் தனி மனித உணர்ச்சிகளும் மட்டுந்தான் முன்னிறுத்தப் படுவதேன்னு கேட்டார். அதற்கு முதல்ல வரக்கூடிய படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஒருமை சார்ந்ததா இருக்கும். பின்னாடி கலங்கித் தெளியும்னார்.//

இணையத்தில் பார்த்த குறும்படங்களின் பாதிப்பாக இருக்கும்
:)
//இனிப்பும், வடையும், தேனீரும் இருந்தன ;-) கேசரிக்கு சட்னி தொட்டு தின்றேன்//

சாப்பாட்டு விஷயம் இன்னும் மாறலையா ?
@கோவி
வருகைக்கு நன்றி. சிறப்பான ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வந்த உடனேயே இங்கு ஆர்வமா பின்னூட்டமிட்ட அன்பு நெகிழ வைக்கிறது ;-)

@நசரேயன்
என்ன செய்ய, நாவை மட்டுறுத்துவது இன்னமும் பெரும்பாடாத் தான் இருக்கு.
நிகழ்வில் பங்கேற்ற உணர்வை அளித்த பதிவு. நன்றி.

- பொன்.வாசுதேவன்

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி