Skip to main content

இரகு வெண்பா - காவியம் பாடல்

இராமன் கதை இங்கே

நாரதர் சொன்ன கதையை காவியமாய் வால்மிகி பாடுதல்

நாரதன் ஓதினான் நம்பியின் கதையினை
பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)
ஆயிரம் காட்சிகள் ஆய்ந்தன யாவையும்
பாயிரமாய்ச் செய்தார் பரிந்து.

இலவ-குசனை அழைத்து பாடப் பணித்தல்

இயற்றிய செய்யுள் இசைக்கப் பணித்தார்
வயதில் இளையோரை ஈர்த்து - வியன்புவியும்
வானமும் உள்ளளவும் வாழ்த்துமே காட்டிடைத்
தேனனையும் பாக்களைத் தான்.

புகழுறப் பாடி அவைதனை அடைதல்

பாடிய ஊரெல்லாம் பாராட்டப் பெற்றனர்
தேடிய உண்மை தெளிந்ததாய் நாடிய
மக்கள் திளைத்தனர்; ஆன்றோர் அவையிலும்
ஒக்கவே சென்றார் உவந்து.

இசைத்த இளையோர் இருவரும் மன்றில்
அசைத்த அகமொரு வாரி - விசையுறு
வாசகம் கேளுமின் வேந்தனின் மக்களே
யாசகம் பாடும் சிறார்.

வேள்வியில் இடையே பாடலைக் கேட்டவர், பாடலை கேட்க இடைவெளி பெற்றனர்.

மன்னன் நடத்திய மாபெரும் வேள்வியை
இன்னிசை பாடியே எட்டினர் - பண்ணுடையப்
பாடலை அந்தணர் போற்றினர் வேள்வியில்
இடைவெளி வேண்டியேப் பெற்று.

சிறுவர் பற்றி அறிந்த இராமன் தம்முன் பாட அழைத்தது

முன்னம் பிரிந்தார் முகங்கொள நேர்ந்தது
மன்னன் அழைத்தான் மகவினை - இன்னும்
அறியா திருந்தவன் ஆழ்ந்தான் கதையில்
சிறிதும் கலையா(து) இருந்து.

முந்தைய பகுதி      அடுத்த பகுதி

Comments

இந்த இடுகையை இணைப்பதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. எல்லாம் முடிச்சு பாத்தா தமிழ்மணம் கருவிப் பட்டையக் காணோம்.

ஒருவழியா போட்டாச்சு. அதுல அகரம்.அமுதாவின் பின்னூட்டம் தொலைந்து போய் விட்டது. அமுதா, மன்னியுங்கள். மாலை அஞ்சலில் இருந்து எடுத்துப் போடுகிறேன்.

@அமுதா
//பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியின்(று)
ஆயிரம் //

நாலசைச்சீர் என்றெண்ணி நான்சீர் புணர்ந்தபின்னும்
நாலசையே நிக்குது பார்!

//பாரதம் ஏத்துப் படித்திடவே - சாரதியற்(று)
ஆயிரம் //

இப்ப மாத்திட்டேன். இன்னும் ஒரு பாடல் சேர்த்திருக்கிறேன். பாருங்க.
அமுதா, தலை(ளை) தட்டிக் காட்டிய உங்கள் பின்னூட்டம் இங்கே.

//வெண்பாக்கள் அனைத்தும் அருமையாய்ப் புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

சாரதியின் (றி) ஆயிரம் -தளைதட்டுகிறது. புணர்ந்தால் சாரதியின்றி யாயிரம் எனவரும். சாரதியின்றி-கூவிளந்தண்பூ சீராதல் காண்க. நாளசைச்சீர் வெண்பாவில் வரக்கூடாதல்லவா?//

பாராட்டு இங்கே.

//சொற்கள் எதையும் பிரிக்காமல் தனித்தனி சொல்லகக் கையாண்டு மிக அழகாய் வெண்பா புனைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்//

தவறுதலாக நீக்கியமைக்கு மன்னிக்கவும். வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.
Mahesh said…
சாமி... வெண்பாக்கள் அருமை.... நமக்கு வெறும்பாவே வராது... நீங்க வெண்பாக்கள் போட்டு தாக்குறீங்க... மிகவும் ரசித்து படித்தேன்... பல பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்...

இன்னும் நெறய எழுதுங்க... நம்ம பதிவுல உங்க பேர கோத்து விட்டுடறேன்..
@mahesh

வருகைக்கு நன்றி! வெண்பா எழுதறது எளிது. கீழே உள்ள சுட்டிகளுக்குச் சென்று பட்டையக் கிளப்புங்க.

http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ (பதிவின் கீழேஏஏஏ அண்மைய இடுகைக்கான சுட்டி இருக்கு, பாருங்க)
http://payananggal.blogspot.com

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி