என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள். ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை. இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு. ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு. பிரிவுன்னா அப்படித் தான். ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு. மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன். தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்...