Skip to main content

விசயம்

Manarkeni 2009தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று.

இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது.

மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது.

புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க?
மாற்று: என்ன வேலையா வந்தீங்க?

புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.
மாற்று: சொல்ல வந்த செய்தியை சட்டுன்னு சொல்லுங்க.

புழ: விசயந் தெரியாமப் பேசாத.
மாற்று: உண்மை தெரியாமப் பேசாத.

புழ: உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லணும்.
மாற்று: உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லணும்.

புழ: அவங்கிட்ட கத்துக்க நிறைய விசயம் இருக்கு
மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய திறமை இருக்கு.

புழ: அவர் விசயத்தை விடு
மாற்று: அவர் கதையை விடு

இன்னும் பல. விசயம் வரும் இடங்களில் எல்லாம் matter என்ற ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்தலாம். தமிழில்அப்படி ஒரு சொல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மேலே உள்ள தொடர்களை எல்லாம் மீண்டும், மீண்டும் அசை போட்டதில் விசயத்துக்கு அந்த இடத்தில் வேலையே இல்லை என்பதை உணர முடிந்தது.

என்னவா வந்தீங்க?
சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லுங்க.
ஓண்ணு/எதுவுந் தெரியாமப் பேசாத.
உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்.
அவங்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு
அவரை விடு

விசயம் என்ற சொல்லோடு என்ன வேற்றுமை உருபு (ஐ,ஆல்,கு,இன்,அது,கண்) வந்ததோ, அந்த வேற்றுமை உருபை அதற்கு முன் உள்ள சொல்லோடு இணைத்தால் விசயமே தேவைப் படலை. தேவைப் படாததற்கு (விசயத்துக்கு!!) எதுக்கு சொல் தேடணும்னு விட்டுட்டேன்.

ஆமா, விசயம்னா, அதன் மூல மொழியில் என்ன பொருள்னு யாருக்காவது தெரியுமா?

=================================================================
சிங்கைப் பதிவர்கள் தமிழ்வெளி திரட்டியுடன் நடத்தும் போட்டி இன்று தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தலைப்புகளுக்கும் ஏனைய தகவல்களுக்கும் இங்கே செல்லுங்கள்.

Comments

தமிழ் said…
உண்மை தான்

சில சொற்களைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம் உண்டாக தான் செய்கிறது.

தங்களின் இடுகை பலவகையான தகவல்களைத் தந்தது.

புழக்கத்தில் மாற்று என்பது ஒரு அருமையான,பயனுள்ள உரையாடலை ஊக்குவிக்க வழி
வகுக்கும்.

/அந்த இடத்தில் வேலையே இல்லை என்பதை உணர முடிந்தது./

அருமை


சொல்லோ ( வார்த்தை )
சொற்றொடரோ ( வாக்கியம் )
சொக்க வைத்துள்ளீர்கள்

தமிழுடன்
திகழ்

( வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் தான் வார்த்தையாகவும், வாக்கியமாகவும் வடிவம் பெற்று
வண்ணத்தமிழில் இடம் பிடித்தது என்பது என் எண்ணம், இதில் கருத்து
வேறுபாடு இருப்பதில் பிழை ஒன்றுமில்லை )
நல்ல இடுகை !

//அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். //

'கடினத்தை' என்று எழுதுவதற்குப் மாற்றாக ஏன் ? இப்படி எட்டுக் கோணாலான சிக்கல் ?
தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான் இடற்பட்டேன் !
பிறகு எளிதாகிவிட்டது.

வழக்கு : ஒரு விசயம் சொல்லனும்
மாற்று : ஒன்றைப் பற்றி சொல்லனும்

புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க.
மாற்று: சொல்ல வந்ததைப் பற்றி சட்டுன்னு சொல்லுங்க.

புழ: அவங்கிட்ட கத்துக்க நிறைய விசயம் இருக்கு
மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய தகவல் இருக்கு.

(இங்கே விசயம் தகவல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது)
வருகைக்கு நன்றி திகழ்மிளிர்.

//வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் தான் வார்த்தையாகவும், வாக்கியமாகவும் வடிவம் பெற்று
வண்ணத்தமிழில் இடம் பிடித்தது//

புதிய தகவல். சுட்டி ஏதேனும் இருக்கிறதா, மேலும் படித்து அறிந்து கொள்ள.

//கருத்து
வேறுபாடு இருப்பதில் பிழை ஒன்றுமில்லை//

கற்றல் இன்னும் கருத்து கொள்ளும் நிலையை அடையவில்லை. அதனால் கற்பிக்க நீங்கள் தயங்க வேண்டியதில்லை.

தமிழுடன் திகழ்கிறீகள், வாழ்த்துகள்.
//'கடினத்தை' என்று எழுதுவதற்குப் மாற்றாக ஏன் ? இப்படி எட்டுக் கோணாலான சிக்கல் ?//

கச்டத்திற்கான மாற்றுச் சொல் அரிதுன்னு ம் சொல்லலாம் சொல்ல வந்தேன். கிரந்த எழுத்தைத் தவிர்த்தது எட்டுகோணலாக்கி விட்டது. தொடர்ந்துஉ எழுதுகிறேன். பின்னர் பழகி விடும்.
//தொடக்கத்தில் 'விசயத்தை' கையாளுவதற்கு நான் இடற்பட்டேன் !
பிறகு எளிதாகிவிட்டது//

இது தான் கோவி குத்து:-)))

//மாற்று: அவங்கிட்ட கத்துக்க நிறைய தகவல் இருக்கு.

(இங்கே விசயம் தகவல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது)//

நுணுக்கம் என்ற பொருள் இன்னும் நெருக்கமாகத் தோன்றுகிறது.
அம்புட்டு விஷயம் இருக்கு.. மாப்ள இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்
அப்புறம்.... சொல்லுங்க... வேறென்ன விஷயம்?
நசரேயன், 'அம்புட்டு இருக்கு'ன்னே சொல்லலாம்.

ஜெகதீசன், வேறென்ன (சொல்லணும்)?
MSATHIA said…
விசயத்துக்கு பதிலா சங்கதி சரிதானே. சங்கதி- தமிழ்வார்த்தையா இல்லையா?

Popular posts from this blog

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி