Skip to main content

திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?

அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்! (திங்கள் சத்யா)

மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள்.

திங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா?

1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்?

2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது?

3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி?

4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்?

இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.

Comments

தமிழ் said…
அதை நான் முன்பே படித்தேன்! நாம் வெடகப்படவேண்டிய செயல்களில் இதுவும் ஒன்றுதான்... தீர்வு விரைவில்!

அவர் சீக்கிரம் இறந்துவிடுவார்!

வருத்தத்துடன்,
மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையை என்னால் முடிந்தவரை வெண்பாவில் எழுதி கிழிக்கிறேன். (கூடிய விரைவில்) வேறென்ன செய்ய?
ஒர் அதிமுக்கியமான சமூக பிரச்சனை குறித்த பதிவுக்கு வெறும் இரண்டே பின்னூட்டங்கள். ஆனால் மொக்கை பதிவுகள் தமிழ் மணம் சூடாண இடுகைகளில்.

சமீபத்தில் சில இடங்களில் துப்புறவு தொழிலாளர்களுக்கு கையுரை எல்லாம் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் அதை பயன்படுத்துவதே இல்லையாம். இதையென்ன செய்வது?

மேலை நாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதால் இப்படி மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் அவலங்கள் நிகழ்வதில்லை. நமது ஊர்களில் அப்படி நவீன இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தால் தற்போது துப்புறவு பணிகளில் ஈடுபடும் பெருமளவிலான மக்கள் வேலை இழக்க நேரிடும். இதற்கும் கட்டாயம் எதிர்ப்பு வரும். அப்படி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுவந்தால், தற்போது அத்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதவது செய்ய வேண்டும். நம் நாட்டில் அதுதான் பிரச்சனையே.

உண்மையிலேயே மக்கள் மீது, அதுவும் எல்லாத்தரப்பு மக்களின் மீதும் அக்கறை கொண்ட தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் அது சாத்தியம்.
வருகைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ்.

//சமீபத்தில் சில இடங்களில் துப்புறவு தொழிலாளர்களுக்கு கையுரை எல்லாம் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் அதை பயன்படுத்துவதே இல்லையாம்.//

பயன்படுத்தும் வகையில் இருந்ததா என்பது ஐயமே! இந்த அளவிலாவது முயற்சி எடுத்தார்களே என்று மகிழ வேண்டியது தான்.

இயந்திரங்கள் மூலம் மனிர்களின் வேலை வாய்ப்பு போய்விடும் என்பது தவறான முடிபு.

1. கணினி வேலை வாய்ப்பை ஏற்படுத்தியது. பறிக்கவில்லை.
2. முன்பு கையில் வாளியுடன் வீடு, வீடாக வந்து மலம் அள்ளும் அவலம் இருந்தது. அம்முறை ஒழிக்கப் பட்டதும் அவர்கள் வேறு நகராட்சிப் பணிகளில் அமர்த்தப் பட்டார்கள். மற்றவர்களும் இன்னும் சுகாதாரமான கழிப்பறைகள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
3. சிங்கையில் புல் வெட்டும் பணியாளர்களைப் பார்த்திருப்பீர்கள். அது போல் வேறு பணிகளுக்கு அமர்த்தலாம்.

அவ்வாறு பணியாளர்கள் நேரிடையாக இறங்கித் தான் வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்குத் தேவையான கருவிகள், சுகாதார பயிற்சிகள் அளிக்கப் படவேண்டும். அதுதான் நாகரிகமான குமுகாயமாக இருக்க முடியும். தேவை அது குறித்த சிந்தனை, உரத்த குரல். அப்பத் தான் அரசு விழிக்கும்.

உங்கள் பின்னூட்டம் இந்த இடுகையை மீண்டும் முகப்புக்கு கொண்டு வரும். இன்னும் நாலு பேர் படிப்பார்களானால் மகிழ்ச்சி. நன்றி.
மன்னிக்க வேண்டும் அய்யா! இக்கட்டுரையைப் படித்தபொழுதே அவர்களைப்பற்றி வெண்பா எழுத எத்தனித்தேன். ஆயினும் மனம் செல்லவில்லை. அதனால் பாதியிலேயே நின்றுவிட்டது. இதோ எழுதியவரை.

சலமும் மலமும்சேர் சாக்கடையை வாரித்
தலைமேல் சுமந்தகற்றல் தத்தம் -தலைவிதியாய்
எண்ணியதைச் செய்கின்றார்; இப்பணிசெய் கைகளினால்
உண்டிடவும் ஆமோ உரை?

கழிவை அகற்றும் கடமையால் மால்வார்
அழிவைத் தரும்நோயால் ஆங்கு!

அகரம் அமுதா

Popular posts from this blog

சிங்கையில் என் முதல் பதிவர் சந்திப்பு!

காலம்: சிங்கை சிங்கங்களின் சந்திப்பு ! மணி மாலை நாலரை, எழுந்திருப்பதா வேண்டாமா? எப்படியும் பதிவர் சந்திப்புக்குச் செல்ல தாமதமாகி விடும். முன்னாடி திட்டமிட்டது போல் தின்பண்டம் எதுவும் வாங்கவும் முடியாது. மேலும், இப்படி காலந்தாழ்த்தி செல்வது தவறு. பேசாம தூக்கத்தைத் தொடரலாம்னு கண்ணை மூடிட்டேன். ஆனாலும் மனப்போராட்டம் தொடர்ந்துட்டே இருந்துச்சு. 'நீ கலந்துக்க கிடைச்ச முதல் வாய்ப்பு. அப்புறம் கோவி எப்ப ஏற்பாடு பண்ணுவார்னே தெரியாது. பேசாம கிளம்பு. வாடகை வண்டி எடுத்தா எப்படியும் சரியான நேரத்துக்கு சேர்ந்துடலாம்' 'இல்ல, இல்ல இப்படி நேரந் தாழ்த்தி போயி அவங்களை காக்க வைக்கிறதுக்கு, ஒரு அரை மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு அவங்ககிட்ட தவிர்க்க முடியாத வேலை(!) வரலைன்னு சொல்லிடலாம். தூக்கமாவது கிடைக்கும்.' இது ரொம்ப நல்ல பரிந்துரையா இருந்துச்சு. நல்ல காரணம்னு அப்படியே ஆழ்நிலை தூக்கத்துக்கு இறங்கிக் கிட்டே இருக்கும் போது அந்த அதட்டல் கேட்டது. 'டேய், நீ இப்படி யோசிச்சிருந்தீன்னா உன் திருமணத்துக்கே உன்னால போயிருக்க முடியாது'. வாரிச்சுரிட்டி எழுத்து, 'ஒரு காப்பி' கத்திட்டே முக

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர். அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்ற

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும் பேருந்து