'அடியேன் இராமானுஜதாசன்'ன்னு அறிமுகமாகும் போது கண்ணில் நீர் கசிவதைத் தவிர்க்க முடியவில்லை. கமலுக்கு மட்டும் ஏன் திரைப்படங்கள் மீது இந்த வெறி! அவர் கடின உழைப்பு ஒவ்வொரு சட்டத்திலும்(frame) தெறி(க்)கிறது. வைணவர்களின் நம்பிக்கையை உடைத்து வரதராஜப் பெருமாள் பெயர்க்கப் படும்போது, அவர்களுக்காக பரிதாபப் படமுடிகிறது. இப்படித் தான் எல்லோருக்கும் இருக்கும் என்ற உண்மை நெளிய வைக்கிறது. அடுத்த பத்து நிமிடத்தில் தொடங்குகிறது குட்டிக் கரணங்கள். Roller Coaster - இல் அமர்ந்ததைப் போல் திரையில் யாரெல்லாம் கமல் என சரியாத் தெரியாமல், கதையிலும், அருமையான வசனங்களிலும் ஒட்ட முடியாமல் வியப்பின் ஊடாக படம் பார்க்கிறோம். அதுவும், விமான நிலையத்தில் அவ்தார் சிங் வாந்தி எடுப்பதை கவனிப்பதா, வெள்ளைக் காரன் விஞ்ஞானியைக் கடத்துவதைப் பார்ப்பதா இல்லை நம்ம நாயுடு இந்தியப் பாரம்பரியத்தை கடைபிடிப்பதை நொந்து கொள்வதா எனத் தெரியாமல் காட்சியாடு சேர்ந்து ஒரு சுத்து சுத்துறோம். எல்லோருமே கமல் ஆனதால் இப்படி தொடர முடியாமல் தவிக்கிறோம்னு நினைக்கிறேன். ஒருவேளை பர, பரப்பான திரைக் கதைன்னு ஆறுதல் பட்டாலும் இது போன்ற காட்சிகளில் முன...