Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்

அலைபேசி உலவிகளும் தமிழும்

நண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை. இணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா? உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும். இதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்? சிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா? ஆ...

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

என்னுடைய வெண்பா அறிமுகம் பள்ளியில் துவங்கினாலும் நேர், நேர் தேமா என்பதுடன் நின்று விட்டது. தேமா, புளிமா, நாள், மலர்... இதெல்லாம் என்னவென்று தெரியாமலே மனனம் செய்து தேறி விட்டோம். சென்ற ஆண்டில் இயன்ற வரையில் இனிய தமிழில் பதிவு வெண்பா ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் எங்கு துவங்குவது என்றே தெரியவில்லை. மனதில் பட்டதை நான்கு அடிகளாகப் பிரித்து எழுதி விட்டேன். இப்னு ஹம்துன் நொந்து போய் துவக்கப் பாடங்களைப் படித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தினார். பாடங்களை ஒருமுறைப் படித்து எழுதத் துவங்கினேன். வாஞ்சி போன்றோரின் ஊக்கம் தொடர்ந்து முயற்சிக்கத் தூண்டியது. அதன் பின் மூன்று இடுகைகளில் ஏனோ அந்த வலைப்பதிவு முடங்கிக் கொண்டது, மிக வருத்தமாயிருந்தது. பேராசிரியர் பசுபதியின் கூகுள் குழும மடல்களையும் படித்திருக்கிறேன். இவையெல்லாம் என் ஆர்வத்தைத் தூண்டிய நேரத்தில், அச்சத்தையும் ஏற்படுத்தின. இனியும் தப்புத் தப்பா எழுதி மற்றவர்களின் நேரத்தையும், தமிழையும் பாழாக்கி விடக் கூடாதே! ஆனாலும் தேற நிரம்ப நாளாகும்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில் கல்லூரி நண்பர்களுடன் திருக்குறள் முழுமைக்கும், (தெரியும் என்பதற்காக அல்ல, தெரி...