Skip to main content

Posts

Showing posts with the label நிகழ்வுகள்

"தனி" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)

கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார். திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும். பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் ...