இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-) சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம். இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லைய...