Skip to main content

Posts

Showing posts with the label கவிதை

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று, இலந்தைப் பழம் போல் என்னுள்! உரித்துத் தின்ன இயலாது; முற்றும் முழுங்கவும் முடியாது; மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது! அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.

அன்றாடங்காய்ச்சி

நாளொரு திட்ட அறிவிப்பு, நாடே குலுங்குது விவாதத்தில்! என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள். எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும். நான் இப்படியே இருந்தால் தானே அவர்கள் அப்படியே பேச முடியும், இந்தக் கவிதையும் எழுத முடியும்!

தொழிலாளியின் பிண்டம்

உறங்கியும் திரும்பாத உற்சாகம், உழைத்துக் களைத்தவனுக்கு. மீளாத உறக்கத்தில் விழுந்தபின் மகன் செய்தான் பிண்டம் மெலிவாக! 'அப்படித் தானே இருந்தார்' என்றான், அப்பாவியாய்.