தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று. இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது. மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது. புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க? மாற்று: என்ன வேலையா வந்தீங்க? புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க. மாற்று:...