இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ! இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது. தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த வி...