கிரிக் இன்போ வலைதளத்தில் சொன்னார்கள் (Quote Unquote) பகுதியில் 'நாங்கள் கடவுளை நம்புவதில்லை. எங்கள் குடும்பம் பகுத்தறிவாளர்களால் ஆனது' என்ற வரிகளைப் பார்த்தவுடன் அட நம்மாளு மாதிரி தெரியுதேன்னு நினைச்சேன். சொன்னவரு பேரு நெப்பொலியன் ஐன்ஸ்டீன். முடிவே பண்ணிட்டேன், தமிழர் தான்னு. ஒண்ணு, இது மாதிரி கடவுள் மறுப்பை பொதுவில் தெரிவிக்க ஒரு தமிழரால் தான் முடிகிறது. இரண்டு, இது மாதிரி, பெயர்கள்ல எது முதல் பேரு எது கடைசிப் பேருன்னு தெரியலைன்னா அவர் தமிழர் தான். இவர் பேரு ஐன்ஸ்டீன், அப்பா பேரு நெப்போலியன். (இதுவே ஒரு பெரிய தொடர் இடுகைக்கான தலைப்புகள் தான்.) அவரோட ஆட்ட குறிப்புகளைப் பார்த்தேன். இரண்டு அ வரிசை ஒருநாள் ஆட்டங்களில் ஆடி இருக்கிறார். அறிமுக ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக 92 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றியில் சிறப்பான பங்காற்றி இருக்கிறார். பந்து வீச்சில் கலக்கா விட்டாலும் ஓட்டங்களை வாரித் தராத வகையில் வீசி இருக்கிறார். இப்போது மலேசியாவில் நடந்து வரும் 19 வயதானோருக்கான உலகக் கோப்பையில் இடம் பிடித்திருக்கிறார். இன்னும் களத்தில் ஆடும் வாய்ப்பைப் பெறவில்லை. பர்க்கலாம், எவ்வளவு தூரம் இந...