Skip to main content

Posts

தன் முயற்சியில் சற்றும் தளராத அளசிங்கப் பெருமாள் (அல்லது) இளைஞர் இருவர் இந்திய சிந்தனையை உலகுக்கு அறிவித்த கதை

இரண்டு இளைஞர்களில் விவகானந்தரை எல்லாருக்கும் தெரியும். இந்தக் கட்டுரையில் நாம் முதன்மைப் படுத்தப் போவது இன்னொரு இளைஞரான அளசிங்கப் பெருமாளை. அளசிங்கப் பெருமாள் தந்தை அன்றைய சென்னை மாகாணத்தின் சிக்கமகளூரில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர். இங்கேயே படித்து முடித்த அளசிங்கப்பெருமாள் கும்பகோணத்தில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரானார். ஆன்மிகத்தில் நாட்டமுடையவராக இருந்த அளசிங்கப் பெருமாள் அமெரிக்காவில் அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்று நடக்க இருப்பதை தன் கிருத்துவக் கல்லூரி தொடர்புகள் வழியாக அறிந்தார். இந்து சமயம் சார்பாக உரையாற்றப் பலர் தயாராக இருந்த போதும் அப்போதிருந்த மதக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கடல் தாண்டிச் செல்ல முன் வரவில்லை. அவருடைய தாய்மாமா ஒருவர் வைஷ்ணவம் குறித்த குறிப்புகளைத் தந்து யாரையாவது அமெரிக்க மாநாட்டில் வாசிக்கச் சொன்னார். அந்த நேரத்தில் தன் இந்தியப் பயணத்தைக் கன்னியாகுமரியில் முடித்து விட்டு சென்னை திரும்பியிருந்தார் விவேகானந்தர். விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்த அளசிங்கப் பெருமாள் அவரிடம் தன்னிடமிருந்த குறி...

சோதிர்லிங்கங்கள் ஐந்து - 1

 பீம சங்கர் மகாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலுமாக உள்ள 5 சோதிர்லிங்கக் கோவில்களைப் பார்ப்பதாகத் திட்டம். 1. பீமசங்கர், புனே மாவட்டம், மகாராஷ்ட்ரா 2. கிரிஷ்னேசுவரர், சம்பாஜி நகர் மாவட்டம், மகாராஷ்ட்ரா 3. திரியம்பக்கேசுவரர், நாசிக் மாவட்டம், மகாராஷ்ட்ரா 4. ஓம்காரேசுவரர், காண்ட்வா மாவட்டம், மத்தியப் பிரதேசம் 5. மகா காளேசுவரர், உச்சயினி, மத்தியப்பிரதேசம் பொங்கல் விடுமுறைக்குத் திட்டமிட்டு பிறகு நண்பர்கள் வரணும்ன்னு டிசம்பர் கடைசிக் கிழமைக்கு மாற்றினேன். நண்பர்கள் வரவில்லை. கிளம்ப ஒருநாள் முன்பு திருச்சி நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவரும் வருவதாகச் சொன்னார். எந்த முன்பதிவும் செய்யலை, கிடைச்ச வண்டில ஏறணும், இருக்க இடத்துல தூங்கணும், பசிச்சப்ப சாப்பிட்டுக்கணும்னேன். ஒத்துக் கொண்டார். திங்கள் காலை 6:20க்கு எழும்பூரில் இருந்து மும்பை கிளம்பிய வண்டியில் சன்னோர ஒற்றை இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ரேணிகுண்டாவில்  நிற்க இடமில்லாத கூட்டம் ஏறியது. அடுத்தநாள் காலை மூன்று மணிக்கு பூனாவில் இறங்கும் வரையிலும் கூட்டம் குறையலை. ரயில் நிலையத்தில் இருந்து நேர பீமசங்கர் கோவிலுக்குக் கிளம்பும்...

சுனைப்பூ சூடியவள் - மீள்நிகழ்வு

என்னடி சோர்ந்து உக்காந்துட்டன்னு கேட்டவாறு குமரி வந்தாள். ஏன் தெரியாதா, நாடன் வேலை தேடிப் போய் இன்னிக்கு பத்து நாளாவுது. என்ன பண்றான்னு தெரியலை. இங்க மட்டும் என்ன வாழுது? இன்னிக்குப் பன்னெண்டு நாளாச்சு. ஆனா, நாடன் என்னென்ன நினைச்சுகுவான்னோன்னு தான் கவலையா இருக்கு. பிரிவுன்னா அப்படித் தான். ஒத்துக்கிறேன். அவனை நினைச்சுக் கவலைப் படக் காரணமிருக்கு. மீள்நிகழ்வு - சுனைப்பூ தொடலை தை அன்று ஒருநாள் குமரி வருவான்னு பூஞ்சுனைல குளிக்கக் காத்திருந்தேன். இந்தப் பகுதில காத்து மேலருந்து கீழ வீசி சுனை இருந்த பகுதில திரும்பவும் மேலெழும். அதனால பூக்கள் பலவும் உதிர்ந்து சுனைத்தண்ணில மிதந்து வரும். இந்தப் பள்ளத்துல தான் நீர் தேங்கி வழியும். அதனால் தடாகம் பூ மூடியே இருக்கும். தேர்ந்தெடுத்த பூக்களால் அடுத்தவர் மேல எறிஞ்சு விளையாடுவோம். இப்ப தென்பலா அருகே நாடன் வந்துக்கிட்டு இருக்குறதைப் பாத்தேன். தென்பலா தாண்டுனா ஒத்தையடிப் பாதை பிரியும். நேர வந்தா சுனையை ஒட்டி மேல ஏறலாம். இங்க வருவானான்னு ஆவலா இருந்தது. அவன் கவனத்தை இழுக்க முடிவு பண்ணி தொப்புனு தண்ணில குதிச்சுட்டேன். சத்தம் கேட்டு விரைவாவே எட்டு வைச்சு வந்...

சுனைப்பூ சூடியவள் - இன்று மலர்ந்தவை

தேனு, உன்னைய எனக்கு ரொம்பப் புடிக்கும் இன்னிக்கு தான் தோணுச்சாக்கும் எப்பவுமே புடிக்கும் தேனு எனக்கு அப்படித் தெரியலையே மெய்யாலுமே தேனு ம், சரி எவ்வளவு புடிக்கும், ஒரு காப்படி? அய்யோ, நான் உண்மையத்தான் சொல்றேன். என் உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவுலயும் உன்னைத் நிறைச்சிருக்கேன் தெரியுமா! கதை விடற. எப்படி நான் நம்புறது? வேணும்னா என் மூச்சுக் காத்தைக் கேளு. அப்ப மூச்சுல முடிஞ்சு வைச்சிருக்கன்னு சொல்லு. நான் முடிச்சு வைக்கல. உன் நினைப்ப உடம்போட ஒவ்வொரு நாளமும் காத்தா முடிச்சு வைச்சு அனுப்புது. அப்ப என் நினைவுகள் கொஞ்சநாள்ல தீந்து போயிருமே? அப்ப புதுசா காத்தை உள்ள இழுத்து உன் நினைவுகளை முடிஞ்சு உள்ள அனுப்புவேன். உன் பேச்சு தான் என்னய இப்படி கிறுக்கா உக்கார வைச்சிருக்கு. இருவரும் பேசவில்லை. ஒரே நேரத்தில் பெருமூச்சு எழுகிறது. ம், இப்படி பெருமூச்சு வந்ததே, அது என்னவாம். தீராத ஏக்கம் இருந்துச்சுன்னா ஏக்கம் இன்னும் பல எண்ணங்களை உருவாக்கும். அந்ம எண்ணங்களின் முடிச்சுகள் காத்துல நிரப்பி அனுப்ப நேரமாகும். அதனால மூச்சு பெரிசாயிரும். மகிழ்ந்து சிரிக்கிறாள். உன்னய மடக்க முடியாது. நீ எம்மேல நம்பிக்கை இல்ல...

சுனைப்பூ சூடியவள் - பாணாள் பள்ளி யானை உயிர்த்து

வணக்கம் டாக்டர் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். இதே மாதிரி எங்க போனாலும் முகமூடி போட்டிக்கிட்டு போங்க. அடிக்கடி கைகளைக் கழுவுங்க. வீட்ல எல்லாரும் நலமா? நலம். கரோனானால மூச்சுத் திணறல் ஏன் டாக்டர் வருது? கரோனா கிருமி உள்ள நுழைஞ்சதும் அதைக் கொல்றதுக்காக தற்காப்புத் துறை தன் படைகளை அனுப்பும். அதுல கீட்டோன்சும் உண்டு. மற்ற படைகளால் வெல்ல முடியாதப்ப கீட்டோன்ஸ் கிருமியை சுத்தி வளைச்சு வெடிச்சிருங்க. தற்கொலைப் படை. இந்த வெடிப்புல நுரையீரல் செல்களும் பாதிக்கப் படும். இதே மாதிரி ஒவ்வொரு கிருமியாக் கொல்லும் போது நுரையீரல் பெருவாரியா பாதிக்கப் பட்டிருக்கும். இதனால நுரையீரலால மூச்சுச்சுற்றை முடிக்க முடியாம திணறல் வருது. இந்த மூச்சுச் சுற்றை விளக்குங்களேன்? பள்ளிக் கூடத்துல படிச்சது மறந்து போச்சா? (சிரிக்கிறார்) மூச்சும் இதயமும் ஒருங்கிணைந்து செயல்படணும். உடம்புல உள்ள செல்கள்ல ஆற்றல் எரிப்பு தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும். எரிக்கிறதுக்கு ஆக்சிஜன் வேணும். குருதி தான் ஆக்சிஜனை சுமந்து செல்லும். ஆக்சிஜனை குருதில ஏத்தி விடுறது நுரையீரலின் முதல் சுற்று. இந்தக் குருதியை இதயம் உடல் முழுக்க நல்...

சுனைப்பூ சூடியவள் - 1

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கண் பேதை தானறிந் தனளோ இலளோ பானாள் பள்ளி யானையின் உயிர்த்தென் உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே! -கபிலர் அவள் ஒரு பேதை. அன்பு நிரம்பியவள். அது அவள் கண்களிலேயே தெரியும். நான் பார்த்திருக்கிறேன். மலர்ந்து மணம் வீசும் மலரைச் சூடும் பெண்களிடையே பூக்களுக்குப் பறிக்கும் துன்பம் தர அஞ்சுபவள். உதிர்ந்து சுனை நீரில் ஓடி வரும் பூக்களைத் தொடுத்தே அணிபவள். இவ்வளவு ஏன், திணைக் காவல் சென்றால் மாலை திரும்பும் போது தொண்டை கட்டிக் கொண்டிருக்கும். ஏய் கிளி, என் காட்டின் கதிர்களை தின்னாதே. எனக்கு இழப்பு ஏற்படுத்தாதே. தின்றது போதாதா என்றெல்லாம் திட்டுவாளே ஒழிய கவண் வில் சுழற்ற மாட்டாள். கிளிகளுக்கு அடிபடுமோ என வாடுவாள். என் மனைவி தான் அவள். இப்போது பொருள் தேடி வெகு தொலைவு வந்து விட்டேன். நெஞ்சில் நின்றாடும் அவள் காதல் பார்வை சுரக்கும் அன்பு பெரும் ஏக்கத்தைத் தருகிறது. அந்த ஏக்கம் நள்ளிரவில் உறங்கும் யானையின் மூச்சினும் நெடியதாய் பேரொலி கிளப்பி என் நினைவுகள் அவளையே சுற்றி வருவதை அறிவாளா என்ற வினாவோடு முடிகிறது.

ஈ என இரத்தல்...

நண்பகல் உணவுக்குப் பின் பூட்டியிருந்த ஒரு கடையின் அருகே மரநிழலில் வண்டியை நிறுத்தி புகை பிடிக்கத் தொடங்கினேன். புறநகரின் உட்பக்கம் செல்லும் அந்தச் சாலையில் போக்குவரத்தே இல்லை. பெட்டிக் கடையின் பின்புறம் ஒருகுடிசை மாதிரி ஒண்டி வீடு இருந்த்து. வாசலில் பாவாடை சட்டை போட்ட ஒரு பெண் வெளிப்புற அடுப்பினருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை அங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவன் வந்தான். திடீரென்று 'இந்தக் கை உடைஞ்சி போச்சி' என்று அவன் பேசத் தொடங்கியதும் தான் அவன் இருப்பையே உணர்ந்தேன். பழசாகிப் போன அல்லது அழுக்குச் சேர்ந்த உடைகளை அணிந்திருந்தான். சில நாளாக குளிக்கவில்லை போல. பிச்சை கேட்பானோ? இதே பொழைப்புன்னு எரிச்சலாகவும் இருந்தது. குடித்துவிட்டு வந்திருந்தால்? ஒருவேளை பணம் கேட்பானோ? அதெல்லாம் இல்லைன்னு சொல்லலாம்னா அவன் இன்னும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை. ஒருவேளை பணம் கேட்டு, தரலைன்னா கையப் புடிச்சுக் கேட்டா? ஒரே அப்பு! ச்சீய், என்ன ஒரு மனநிலை. ஒருவிதமான கூச்சமும் எரிச்சலும் கலந்த அச்சம் தான் என்னிடம் இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எங்களை எந்தவித உணர்ச்சியும...

தனி குறும்படம் - பார்வை

முதன் முதலாக ஒரு குறும்படம் பாக்கப் போறோம்னு ஒரு உணர்வு இல்லைனாலும் இருக்கற மாதிரி நினைச்சுக்குறது நல்லா இருந்துச்சு. தனியா இருக்குற ஒரு ஆளை அவனறியாம உத்துப் பாக்குற முயற்சி தான் தனி. அவனோட பொழுதுகள் ஏதோ ஒரு புறக்காரணி தரும் இடையூறுகளால் துவங்குகிறது. எழுந்ததும் அருகே இருக்கிற பொத்தகங்களில் ஒண்ணை வாசிக்கிறான். சலித்து குளியலறைக்குள்ள போகிறான். என்ன பண்றான்னு இயக்குனர் பதிய விரும்பலை. ஆனா, அந்த நேரத்துல ஒரு பெண் அவன் மனசுல வந்து போறா. தலைகவிழ்ந்து அவனை முறைக்கிறா. அவனால அவளை நிமிந்து பாக்க முடியலை. அப்படி என்ன பண்றான் உள்ள? தெரியலை. வேர்த்தாப்புல வெளில வர்றான். நிறைய மதுப்புட்டிகள். அதுல இருக்குற கடைசி சொட்டுகளை குடிக்கிறான். ப்ச், பத்தலை. வெளில போறான். இப்ப அந்த அறைல திடு,திப்புனு ஒரு பூனை. அந்தப் பூனை மெல்லமா கத்திட்டு அங்க இருந்து வெளில வரப் பாக்குது. மூடிய அறைல இருந்து எப்படி வெளில வர முடியும்? இப்ப அவன் ஒரு மதுப்புட்டியை வாங்கிட்டு வந்துட்டான். குடிக்கிறான். காற்றில் புரளும் பக்கங்களோட படம் முடியுது. இப்ப என்னோட அசை போட்ட பார்வை. படம் மொத்தமா தனியா இருக்க ஒருத்தனோட ஒரு பொழுதைச் சொ...

இட ஒதுக்கீடு!

ஒதுக்கிய ஊரார் ஒதுக்கும் வழக்கம் ஒதுக்கி ஒடுங்கியோ ருக்கென்(று) இடங்கள் ஒதுக்கிய போதும் ஒதுங்கிட(ம்) இன்றி ஒதுங்கும் நிலையை ஒறு.

"தனி" குறும்பட வெளியீட்டு விழா (சிங்கையில்)

கடந்த காரிக்கிழமை நண்பர் பாண்டித்துரையும், அறிவுநிதியும் தயாரித்த (சென்னையில் முன்பே வெளியான) தனி என்ற குறும்பட வெளியீடு அமோக்கியோ நூலக வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர் (100 பேர்ன்றது சிங்கைல பெரிய கூட்டந்தான்). இயக்கம் அய்யப்ப மாதவன், ஒளிப்பதிவு செழியன். செழியன் இந்த தனி குறும்பட வெளியீட்டு விழாவுக்காகவென்றே சிங்கை வந்திருந்தார். திருமதி சித்ரா ரமேஷ் கூட்டத்தை நெறிப் படுத்தினார். இவருக்கு அவைக்கூச்சம் என்பதே இல்லை. நம்மிடம் எப்படி உரையாடுவாரோ அதே மாதிரி மேடையில் பேசுவார். அப்ப இணைத் திரைப்படங்கள்னு (parallel cinema) ஒண்ணு தமிழ்ல இல்லவே இல்லைன்னு குறைபட்டுக் கொண்டார். அதனை இது போன்ற குறும்படங்களின் வரவு நிறைவாக்கும்னு சொன்னார். எனக்கு இணைத் திரைப்படம்னு ஒண்ணு இருக்குறதே அப்பத் தான் தெரியும். பின்னர் ஒரு குறும்பட அறிமுகம் காட்டப்பட்டது. தொடர்ந்து தனி குறும்படம் பற்றிய மதிப்புரை தேர்ந்தெடுத்த சிலரால் வழங்கப்ப்படது. தனி, தனிமை குறித்த வேறுபாடுகளும் பேசப்பட்டது. படத்தைப் பற்றிக் கிட்டத்தட்ட வெவ்வேறு விதமான பார்வைகள் பதியப் பட்டன. எனக்கோ குழப்பமாக இருந்தது. ஒரே படத்தைப் ...

சச்டி உரை - இரண்டாம் நாள் - இருளும் ஒளியும்

இன்றைய நிகழ்ச்சிக்கு உதவித்தொகை (உபயம்) வழங்கியவர் பேச்சாளரின் ஆசிரியரின் பிள்ளை. அந்த ஆசிரியர் அடிக்க மாட்டார் ஆனால் நுள்ளுவார்னு குறிப்பிட்டர். நுள்ளுவார்னா கிள்ளுவார்னு பொருள். இணையத்தில் தேடினால் ஈழத் தமிழர்களின் எழுத்துக்கள் (மட்டுந்) தான் கிடைக்கிறது :-) சைவக் கோயில்களின் கோபுரம் எவ்வளவு தொலைவு வரைத் தெரிகிறதோ, அந்தத் தொலைவை ஆரமாகக் கொண்டு வரையப் படும் வட்டம் கைலாசத்துக்கு ஈடானதாம். இப்பத் தான் தெரியுது ஏன் கோபுரம் உயரமா இருக்குன்னு. அதுக்குன்னு வலி மிஞ்சியும் கோபுரம் கட்ட முடியாது. ஏன்னு பின்னாடி சொல்றேன். ஆனால் இது போன்ற நம்பிக்கைகள் கோயில்கள் எண்ணிக்கை பெருக உதவி இருக்கலாம். இறைவனின் தோற்றரவுகள் எல்லாமே எதிரியைக் கொல்வதாகத் தான் கதைகள் இருக்கும். ஆனால் கந்தன் எதிரியின் தீய எண்ணங்களால் வளர்த்துக் கொண்ட வல்லமையை ஒடுக்கி எளியவராய் ஏற்றுக் கொள்பவனாம். தீய எண்ணங்களை இருள் என்றும் அகற்றும் ஆயுதங்களை ஒளி என்றும் உருவகித்தார். அதனால் தான் கந்தனின் ஆயுதங்களால் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் வேலாயுதம், தண்டாயுதபாணி,செவ்வேல், கதிர்வேல் என்று. இருளில் இருந்து காக்கும் கலன்கள் இல்லைய...

சச்டி நோன்புச் சொற்பொழிவு - த.சிவகுமாரன் - குறவஞ்சிப் புதிர்

நேற்று முதல் சிங்கை சிலோன் சாலை செண்பக விநாயகர் கோவிலில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் கந்த புராண உரை சச்டிக்காக 6 நாள்கள் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. முன்பும் கம்பவாருதி செயராசின் உரைகளைக் கேட்டுள்ளதால் ஆர்வத்தோடு சென்றேன். இம்முறை கோவில் வளாகத்திலேயே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கோவில் உள்ளே நுழையவும் உரை துவங்கவும் சரியாக இருந்தது. ஏடும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசினார். சச்டி நோன்பிருப்பவர்கள் இழந்ததைப் பெறுவார்கள் என்றும் தேவர்கள் அவ்வாறே அசுரர்களிடம் இழந்ததைப் பெற்றனர் என்று சொன்ன போது 'ஈழத்தில் இழந்ததையும் நோன்பினாலேயே பெற்றிருக்கலாமே'ன்னு ஒரு வறட்சியான எண்ணம் ஓடியது. கந்த புராண நூல் ஆறு காண்டங்களாக வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. காஞ்சி கச்சியப்பரால் எழுதப்பட்ட இந்நூல் தமிழர் சால்பை எடுத்துரைப்பதாகவும் கூறினார். வேதாந்தம் கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறது. பரப்பிரும்மமே இறைவன் என்றும் சொல்கிறது. ஆனால் சித்தாந்தமோ கடவுள் உருவம் உடையவர் என்கிறது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களை கந்த புராணம் பரப்பிரும்மம் உருவெடுத்து கந்தனாக வந்தான் என்று தீர்ப...

பணம் பத்தாகுது!

ஒவ்வொரு நாடும் பணம் அச்சடிக்க பெருவாரியாக செலவு செய்கின்றன. போலியாக உருவாக்க முடியாதவாறு பல்வேறு நுட்பங்களைப் புகுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவது வரை என கிட்டத் தட்ட அச்சடிக்கப் படும் பணத்தின் மதிப்பில் கணிசமான அளவு செலவாகி விடும். பின் எப்படி அரசால் நிர்வகிக்க முடிகிறது? உண்மையில் அரசு தான் வெளியிடும் ஒவ்வொரு பணத்திலிருந்தும் பல மடங்கு வருமானத்தை மீட்டு எடுக்கிறது. எப்படின்னு பாப்போம். எடுத்துக் காட்டாக, அரசு வெளியிடும் ஒரு நூறு பணத்தை (அதாங்க உரூவா) எடுத்ததுக் கொள்வோம். அதை ஒருவருக்கு சம்பளமாக வழங்கும் போது 15 (தோராயமாக)பணத்தை வரியாக எடுத்துக் கொள்கிறது. அவர் 85 பணத்தில் வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும் போது 15% (குறைந்த அளவாக) பெட்ரோல் வரி, சாலை வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, விற்பவரின் வருமான வரி என அனைத்து வரிகளையும் மறைமுகமாகக் கட்டுகிறார். இப்படி உற்பத்தியாளரிடம் செல்லும் பணம் மீண்டும் ஒருவரின் சம்பளமாக மறு சுழற்சியிலும் சிறுகச் சிறுக அரசிடம் சென்று சேர்கிறது. சில சுழற்சியிலேயே அச்சடித்த நூறு பணமும் முழுமையாகச் சென்று சேர்ந்து விடும். அது சில திங்கள்களிலேயே பல மடங்காக அ...

விசயம்

தனித் தமிழில் பேசிப் பழக வேண்டும் என்று முடிவுக்கு வந்த போது பிற மொழிச்சொற்களை இனங்காண முற்பட்டேன். சில சொற்களை எளிதாக மாற்ற முடிந்தது. உபயோகம், பிரயோசனம் போன்றவற்றை பயன்பாடு கொண்டு நீக்கிட்டேன். சில சொற்கள் எளிதாக அடையாளம் கண்டாலும் பயன்பாட்டில் கொண்டு வருவது அரிதாக இருந்தது. வார்த்தை அதில் ஒன்று. இன்னும் சில சொற்களைப் பல இடங்களில் பயன்படுத்த தடங்கலாக இருந்தது. இந்த சொற்றொடரில் (வாக்கியமில்லை) தடங்கல்/தடை என்பதற்குப் மாற்றாக சிரமத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். தடையைக் கொண்டு வருவது அரிதாக இருகிறது. அரிது என்ற சொல் கச்டத்தை நீக்கும். ஆனால் தடையைப் பொருட்படுத்தாது பயன்படுத்துவது அரிதான செயலாகத் தான் இருக்கிறது. மிகுந்த தடங்கலை ஏற்படுத்திய சொல் விசயம். இதற்கு ஈடான சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. பாவாணரைப் பார்த்தால் பற்றியம் என்கிறார். அதாவது ஒன்றைப் பற்றிய செய்தி/தகவல் என்பதால். மற்றபடி, இடத்துக்கேற்றவாறு பல சொற்களை ஈடாகப் பயன் படுத்த முடிந்தது. புழக்கத்தில்: என்ன விசயமா வந்தீங்க? மாற்று: என்ன வேலையா வந்தீங்க? புழக்கத்தில்: சொல்ல வந்த விசயத்தை சட்டுன்னு சொல்லுங்க. மாற்று:...

பதிவர்கள் பாதித்த பாராளுமன்றத் தேர்தல்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வலைபதிவர்கள் பெரும்பான்மையாக ஈழத்தமிழர் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டு வந்தனர். மைய அரசு தமிழர் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் பரப்புரைகள் செய்யப் பட்டன. மாற்றம் வேண்டும் என்பதை முன்னிறுத்தி குழுக்களாகவும் செயல்பட்டனர். அதற்கு எதிர்வினைகளும் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று வலைபதிவர்கள் கருத்துகள் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது. தேர்தல் முடிவுகளை உற்றுப் பார்த்தால் பதிவர்கள் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. முன்பு நடந்த தேர்தல்களில் படித்தவர்கள் நிறைந்திருப்பதால் நகரப் பகுதிகள் திமுகவுக்கு ஆதரவானதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் நகரப் பகுதிகள் பெரும்பான்மையாக திமுக கூட்டணியைக் கை விட்டு விட்டன. மாநகராட்சிகளில் நெல்லை, மதுரை தவிர அனைத்து மாநகராட்சி அடங்கிய தொகுதிகளையும் அதிமுக பெற்றிருக்கிறது. பதிவர் நடவடிக்கைகள் நிறைந்த தொகுதிகள் இவை. பதிவர் கருத்துகள் மக்களிடம் சேர்ந்துள்ளன. அவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்ற...

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -2

இராமன் கதை இங்கே சிந்தனையால் செலுத்தப்பட்ட மனிதர்கள். கூர்முள் உடைய குதிரை, தலைவனொடு பார்வை பிரிந்தநற் பாவைஉடன் ஓர்சொல் இழந்த இளவல் எனவகைப் பட்டார் அழுந்தும் கடிவாளம் காண். கூர்முள் - குதிரை செலுத்தும் கருவி இலக்குவன் வருத்தத்தை சீதை மாறுபட்டு புரிந்து கொள்ளுதல் உறுவல் அழுந்த ஒருவன் இளவல் மறுகரை சேர்ந்தான் மனதும் மறுக முறுவல் அணிந்த குலப்பெண் உவனைத் தறுக உணர்ந்தாள் தனித்து. தறுக - தவறாக ஆறுதல் கூற அமைதியாய் நோக்கினாள் 'தேறுதல் அடைவாய், தெரிந்துநான் மாறுதல் கொண்டேன், மயக்கம் குறைந்து; பரிசினைத் தந்தேத் திரும்பலாம் தாழ்ந்து'. அன்பின் அழுத்தம் தாங்காது இலக்குவன் நடந்தவை உரைத்தல் இன்னும் கலங்கினான் இவ்வளவும் நேர்ந்தன சொன்னான் பிதற்றும் தொனியொன்ற - கண்கள் தாழ்ந்தே இயல்பு தடுமாறி போர்தனில் வீழ்ந்தவன் போல்தான் விளர்ந்து. விளர்தல் - வெளுத்தல், வெட்குதல் சீதையின் கைவிடப்பட்ட நிலை கண்ட துறவோர்கள் வால்மீகி குடிலுக்கு அழைத்துச் சென்றனர் 'சுமக்கும் வயிற்றின் சுமைதளர் காலம் உமக்கும் பொறுக்க முடிந்ததோ' - விம்மலாய்ச் சுட்டினாள் இளவலிடம் ஒண்ணா(து) உணர்த்திட கட்டறுந்த கண்கள் கசிந்து. வேற...

அலைபேசி உலவிகளும் தமிழும்

நண்பர் ஐ-போன் 3ச்சி(ஜி) கொண்டு வந்திருந்தார். ஆவல் குறுகுறுக்க தமிழ்மணம் வலைப்பக்கத்தைத் திறந்தேன். சிறு பிழைகளைத் தவிர பக்கத்தின் உள்ளடக்கத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் தமிழில் எவ்வாறு எண்ணங்களை உள்ளிடுவது எனத் தெரியவில்லை. இணைய உலாவியில் தமிழ் 99 எழுதிகள் இருந்தால் உள்ளிடலாம். அலைபேசிகளுக்கு என தமிழ் மென்பொருள்கள் இருக்கின்றனவா? உயர்கட்ட குழப்பமாக அலைபேசிகளிலும் சிம்பியான், விண்டோச்(ஸ்), மேக் என வெவ்வேறு இயங்கு தளங்கள் உள்ளன. தமிழ் எழுதிகளில் இந்த இயங்கு தளங்களுக்கான ஒப்புமை(Compatibility) இருக்க வேண்டும். இதையெல்லாம் விட, விண்டோச் மொபைல் 6.1 இயங்கு தளத்தைக் கொண்ட சாம்சங் ஓம்னியா அலைபேசியில் ஐஈ உலவியில் தமிழ்மணம் கட்டங்கட்டப் பட்டுத் தெரிகிறது. Encoding ஒருங்குறி எனத் தேர்வு செய்தும் பயனில்லை. ஓபரா உலவியிலும் இதே கதை தான்.இந்த அலைபேசிகளில் 3ச்சி தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்? சிங்கையில் ஐ-போன் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னர் டுடே என்னும் நாளிதழ் அலைபேசிகளுக்கான தனிப்பட்ட இணைய பக்கங்களை வெளியிட்டது. அதுபோன்ற விழிப்புணர்வுடனான செயல்பாடுகள் தமிழ் மட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றனவா? ஆ...

இரகு வெண்பா - இரட்டையர் முன்கதை -1

இராமன் கதை இங்கே எதற்குப் பிரிந்தார் எனும்கதை சொல்வேன் புதையும் மனமே பொறைகொள் - வதமுடித்த கோமகன் மக்கள் குறையற ஆண்டனன் தாமரைப் பூமக ளோடு. கருவுந் தரித்தாள் களிகூர்ந்த வாழ்வில் பெருங்குசை உற்றதே கோவில் - நறுமுகை ஏந்தினாள் நாதனை வேண்டினாள் நற்றவஞ்செய் நன்னிலஞ் செல்ல நசிந்து. குசை - மகிழ்ச்சி கோவில் - அரண்மனை கொண்டான் வியப்பெனினும் பூமகளு வப்பவள் எண்ணம்போல் அத்த(ம்) அனுப்பத்தன் பின்னனை ஏவல் அழைத்தான்; இளவல் இயம்பினான் வேவுரைத்த ஊர்மக்கள் கூற்று. அத்தம் - காடு என்னே அரசர்? செறுநர் கவர்ந்தபெண்ணை பொன்னே எனச்சேர்தல் ஒவ்வாதே முன்னோர்கள் சொன்ன படியென்றே புல்லறிவாற் போந்தார் மன்னன் மனம்வருந்து(ம்) ஆறு. சிறைமீண்ட பூசுதை சீர்மிகுந்த போதும் நிறையிலை என்பார் இருக்க - பொறையறு மன்னன் புரையெனத் தேர்ந்தான் இரியலால் குன்றில் உருண்டதாம் கல். இரியல் - விரைந்து, நிலை தடுமாறி தூற்றலஞ்சி இல்லாள் உவந்தபடி கானகம் மாற்றத் துணிந்திள வல்செய(ல்) - ஆற்றப் பணித்து விளக்கியுரைத் தான்வேந்தன் ஆங்கே பணிந்தான் இளவல் பழிக்கு. பிணங்கு தலன்றே உடன்பொருந்த; வாழ்வில் அணங்கினைச் சேர்தல் அரிதென்(று) உணர்ந்தான், சுணங்கினான் சோர்வா...

ஆகஸ்டு - சிங்கை பதிவர் கூட்டம் - அங் - மோ - கியோ

இது தொடர்பான முந்தைய பதிவு: காலம்: சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ! இயல்பான பேச்சும், இனிப்பான உணவும் பதிவர் கூட்டத்தைச் சிறப்பாக்கின. அங்கே பகிர்ந்து கொள்ளப் பட்ட சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன். பல்வேறு திசைகளில் பயணித்த பேச்சு ஒரு கட்டத்தில் தமிழில் பெயர் சூட்டுவதைப் பற்றி நின்றது. தமிழில் பெயர் சூட்டுவது என்னமோ இந்து என்று கருதப் படுபவர்களுக்கு மட்டும் உண்டான கடமை இல்லை. மற்ற மதத்தவர்களும் முயலலாம் என்று விவாதம் தொடங்கியது. பால்ராஜ், புனிதர் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட விரும்புவதால் ஆங்கிலப் பெயர்களாக அமைந்து விடுகின்றன என்றார். வியட்நாமில் கிறித்துவர்கள் வியட்நாமியப் பெயர்களைத் தான் சூட்டுகின்றனர் என ஜோ அழகாக மறுத்தார். மேலும், தமிழில் பெயர் வைப்பதில் தடை என்று எதுவும் இல்லை, அவரவர் விருப்பத்தை பொறுத்து என்றார். நானும், இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் அரபிப் பெயர்களை வெகுவாக பயன்படுத்துவதில்லை. பின் ஏன் நாம் மட்டும் ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினேன். மேலும் விரிவாக விவாதிக்க எனக்கும் தயக்கமாக இருந்தது. பரிந்துரை என்ற அளவிலேயே அந்த வி...

திங்கள் சத்யா -> அசுரன் -> தொடரும் சோகம்; தீர்வு?

அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்! ( திங்கள் சத்யா ) மேலே உள்ள சுட்டியைப் படித்து விட்டு தொடருங்கள். திங்கள் சத்யாவின் இது போன்ற இன்னொரு பதிவினை (இன்னொரு) சத்யா குறிப்பிட்டிருந்தார். படித்து விட்டு பல நாட்கள் மனம் கலங்கிப் போயிருந்தது. இப்போது ஓராண்டுகள் கழித்து அதே சோகம் இன்னொரு இடுகையாக சற்றும் மாற்றமின்றி. இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் இந்த நிலை தொடரத்தான் போகிறதா? 1. ஆயிரமாயிரம் பெருமைகள் கொண்டாடும் நம்மால் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு சுகாதாரமான முறையில் வேலை செய்ய வழியேற்படுத்த முடியவில்லை. எதனால்? 2. மேலைநாடுகளில் இந்த வேலை எவ்வாறு கையாளப்படுகிறது? 3. அரசின் கவனத்தை ஈர்ப்பது எப்படி? 4. அரசுகள் கையாலாகதவை என்றால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாம் எவ்வாறு உதவ முடியும்? இதை இப்படியே தொடர விடக் கூடாது. இயலவில்லை என்றால் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்று தொட்டுத் தொடரும் நாகரிகம் என்று வெட்கமின்றி கூறித் திரிபவர்களாகவே பார்க்கப் படுவோம்.