Skip to main content

அன்றாடங்காய்ச்சி

நாளொரு திட்ட அறிவிப்பு,
நாடே குலுங்குது விவாதத்தில்!
என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள்.
எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும்.
நான் இப்படியே இருந்தால் தானே
அவர்கள் அப்படியே பேச முடியும்,
இந்தக் கவிதையும் எழுத முடியும்!

Comments

தாசன் said…
வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள்.
வருகைக்கு நன்றி, தாசன்.