Skip to main content

Posts

பில்லா பாத்திட்டீங்களா?

அண்மையில் மலேஷியாவில் கோலாலம்பூர், லங்காவி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தோம். சுற்றுலா குறித்து பின்பு எழுதுகிறேன். சிங்கப்பூர் திரும்பியதும் பில்லா படம் பார்த்தோம். வாழ்வில் முதன் முறையாக 'இதோ இந்த இடம் நாம பாத்தோம், நாம போன இடம்' என குழந்தை போல் சத்தமாச் சொல்லிக்கிட்டு குதூகலித்தோம். முதல் முறையாக இராமேஸ்வரம், பாம்பன் முதலிய பகுதிகளைத் திரையில் கண்ட போது மகிழ்ந்ததைப் போல் இருந்தது. அப்போது கூட அரங்கிலேயே கூவியதில்லை. இப்பல்லாம் யாரிடம் பேசினாலும் முதல் கேள்வி 'பில்லா பாத்திட்டீங்களா' தான். சின்னபுப்புள்ளத் தனமாத்தான் இருக்கு.. ஆனாலும் தவிர்க்க முடியலை ;-)

அன்றாடங்காய்ச்சி

நாளொரு திட்ட அறிவிப்பு, நாடே குலுங்குது விவாதத்தில்! என்னை முன்னேற்றுவதே குறிக்கோள் என்கிறார்கள். எனக்கொன்றும் தேறியதில்லை, எப்பொழுதும். நான் இப்படியே இருந்தால் தானே அவர்கள் அப்படியே பேச முடியும், இந்தக் கவிதையும் எழுத முடியும்!

தொழிலாளியின் பிண்டம்

உறங்கியும் திரும்பாத உற்சாகம், உழைத்துக் களைத்தவனுக்கு. மீளாத உறக்கத்தில் விழுந்தபின் மகன் செய்தான் பிண்டம் மெலிவாக! 'அப்படித் தானே இருந்தார்' என்றான், அப்பாவியாய்.

அக்டோபர் மாத போட்டிக்கு

நேரமில்லாது போனதால் இம்முறை என் மனைவி எடுத்த படங்கள். வெண்பா போட்டு அப்புறம் விளக்குறேன். இந்த போட்டிக்காக மட்டுந்தான் என்னோட வலைப்பூ இப்ப இருக்கு போல.

செப்டம்பர் மாத போட்டிக்கு!

ஒளியிலே... சரவிளக்கு, நகர்ந்து நில்லுங்கள்!

பின்னூட்டம் நீண்டால் பதிவாகும்!

லக்கி அவர்களின் பதிவு க்கு பின்னூட்டம் இட தட்டிய போது மிகவும் நீண்டு விட்டது. அதனால் இப்படி ஒரு பதிவு. என் கொல்டி நண்பன் அரவம் என்பதற்கு அரண்டு போக வைக்கும் கதை ஒன்று சொன்னான். இராவணனை வீழ்த்தி திரும்பும் வழியில் புஷ்பக விமானத்தில் இருந்த வானரங்கள் ஆரவாரத்துடன் இருந்தன. அனுமார் வந்து கண்டித்த போது 'அரவம், அரவம்'னு (தெலுங்கில் அரவம் என்றால் கத்த மாட்டோம்னு பொருள்) சொன்னாங்களாம். சில தடவைக்குப் பிறகு அனுமார் கடுப்பாகி எல்லோரையும் தூக்கி கீழே போட்டுட்டாராம். அவங்க விழுந்த இடம் தமிழ்நாடு. அதனால தான் தமிழ் பேசுறவங்களை அரவம்னு சொல்றாங்க. அப்படி பாத்தா நீங்கள்லாம் குரங்குன்னு சிரிச்சான். 'அதெப்படி அரவம், அரவம்னு தெலுங்குல கத்தினவுங்க தமிழ் நாட்டைச் சேர்ந்தவுங்களா இருக்க முடியும்? புலவர் குழந்தை சொன்ன மாதிரி திராவிடனான இராவணனை தோக்கடிச்சவுங்கன்ற கடுப்புல கீழ விழுந்தவுங்களை துரத்தி அடிச்சுட்டாங்க தமிழ்நாட்டு மக்கள். அவங்கலாம் திருப்பதிக்கு அப்பால ஓடிப்போயிட்டாங்கன்னு' சொன்னேன். அப்ப நண்பனின் முகம் நான் சொன்னதை உறுதிப்படுத்துவது போல இருந்தது.

எங்கும் இந்தியா

அண்மைக் காலமாக வெளிவரும் செய்திகள் மனதுக்கு உவகையூட்டுவதாக உள்ளது. இந்தியர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்களாக பார்க்கப்படுகின்றனர். வெளி நாடுகளில் இந்தியப் தயாரிப்புகள் மீது வாங்குவாரின் நம்பிக்கை கூடியுள்ளது. இது எல்லாவற்றையும் விட, அனைவரும் நம்மை நண்பர்களாகத் தான் பார்க்கின்றனர். ஒரு பக்கம் பிரேசில், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் இணைந்து ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடாக முயற்சித்து வருகின்றன. அடுத்து பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா தங்களை BRIC நாடுகள் என அழைந்துக் கொள்கின்றனர். ஒத்துழைக்க முனைகின்றனர். அமெரிக்கா ஒரு படி மேலே சென்று இந்தியாவுடன் (மட்டும்) அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ள துடிக்கிறது. இந்த வாரம் இந்தியா வந்த ஜப்பான் தலைவர் (பிரதமரை என்னவென்று அழைப்பது?) அபே இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுடனான வணிகம் 500 கோடியை எட்டும் என்கிறார். அத்துடன், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஒரு வணிகக் கூட்டமைப்பை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். இப்படி பல நாடுகளின் போக்கு அமைந்ததற்கு கடந்த பத்து - பதினைந்து ஆண்டு நிகழ்வுகள் முக்கிய காரணிகளாக அமைந்தன. 1. திறந்த பொருளாதார கொள்கை. பிற நாட்டினர் நம் மீத...